Cricket tamil news: ரெய்னா கழன்றுகொண்டதால், இப்போது சி.எஸ்.கே அணியில் துணை கேப்டன் யார்? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதற்கு அணி நிர்வாகம் காமெடியாக பதில் கூறினாலும், துணை கேப்டன் பதவியை வகிக்க தகுதியான நபர்கள் சி.எஸ்.கே.வில் இருக்கிறார்கள்.
வியாழக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ‘ரெய்னா இல்லாததால், சி.எஸ்.கே அணியின் வைஸ் கேப்டன் (vice captain) யார்?’ என்கிற கேள்வியை விடுத்தார். அதற்கு அணி நிர்வாகம், ‘wise கேப்டன் இருக்கிறாரே?’ என புத்திசாலித்தனமாக பதில் கொடுத்தது. அதாவது, புத்திசாலித்தனமான டோனி இருக்கையில் பயம் ஏன்? என்பதே சி.எஸ்.கே எழுப்பிய பதில் கேள்வி.
IPL 2020 chennai super kings vice captain: சென்னை சூப்பர் கிங்ஸ் துணை கேப்டன்
எனினும் துணை கேப்டன் பதவிக்கு சி.எஸ்.கே அணியில் ஆள் இல்லாமல் இல்லை. ரெய்னாவை விட சூப்பர் ஃபார்மில் தேசிய அணியில் கலக்கிக் கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜா, டோனியின் செல்லப்பிள்ளை என்பதை மறந்து விடக்கூடாது. ஜடேஜா ஃபார்மில் இல்லாமல் தவித்த நாட்களிலும்கூட அவரை அரவணைத்து ஆதரித்தவர் டோனி. இப்போது செம்ம ஃபார்மில் இருக்கும் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி அழகு பார்க்க மாட்டாரா என்ன? எனவே சி.எஸ்.கே.வின் முதல் தேர்வு ஜடேஜாவாகத்தான் இருக்கும்.
கிரிக்கெட் குறித்த ஜடேஜாவின் அறிவும், சூழல்களுக்கு தகுந்த அவரது ஆட்டத்திறனும் அனைவரும் அறிந்ததே. எனவே இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமானவரும்கூட!
ஒருவேளை ஜடேஜாவே அந்தப் பதவியை விரும்பாவிட்டால்..? அல்லது, வெளிநாட்டு வீரர் ஒருவரை கவுரவிக்க டோனி விரும்பினால்? இந்தச் சூழலில் ஷேன் வாட்சன், பாப் டுபிளிசிஸ், பிராவோ ஆகியோர் சாய்ஸில் வருவார்கள். பாப் டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோரின் சீனியாரிட்டிக்கு துணை கேப்டன் பதவியை தவிர்க்கவே விரும்புவார்கள். ரெய்னா, ஜடேஜாவைப் போல பிராவோவும் கேப்டன் டோனிக்கு பிடித்தமானவர். அணியின் வெற்றிகளிலும் முக்கியப் பங்காற்றுகிறவர். எனவே ஜடேஜா மறுக்கும் பட்சத்தில் பிராவோ அந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
‘சின்ன தல’ யார் என்பதை அடுத்தடுத்த சி.எஸ்.கே நகர்வுகளில் தெரிந்து கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"