scorecardresearch

சி.எஸ்.கே அபார முயற்சி… தமிழகத்தில் 2 இடங்களில் கிரிக்கெட் அகாடமி!

A four-time IPL champion Chennai Super Kings To Launch Super Kings Academies In Chennai And Salem Tamil News: அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன், சூப்பர் கிங்ஸ் அகாடமி உயர்தர பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளை வழிநடத்துவதில் முழுமையான அணுகுமுறையையும் எடுக்கும்.

Cricket Tamil News: CSK announces Super Kings Academies in Salem, Chennai

Chennai Super Kings Tamil News: ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வலம் வருகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி வழிநடத்தி வரும் இந்த அணியை இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் இந்நிறுவனம், இளம் வீரர், வீராங்கனைகளுக்கான கிரிக்கெட் அகாடமியை (சூப்பர் கிங்ஸ் அகாடமி) சென்னை மற்றும் சேலத்தில் தொடங்க உள்ளது.

சென்னையில் முதல் சூப்பர் கிங்ஸ் அகாடமி துரைப்பாக்கத்திலும், சேலத்தில் சேலம் கிரிக்கெட் அறக்கட்டளையிலும் அமைக்கப்படும் என்றும், இந்தாண்டு ஏப்ரல் 2022 முதல் தொடங்கி ஆண்டு முழுவதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகாடமியில் அனுபவம் வாய்ந்த, பிசிசிஐ (BCCI) நிர்வாகம் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் மாணவர்களுக்கு சிஎஸ்கேவின் (CSK) கற்றல் முறையை வழங்குவார்கள். அகாடமியானது சிஎஸ்கே அணியின் கற்றல் மற்றும் பயிற்சி முறையை அணுகும் மற்றும் அணியில் உள்ள வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களிடமிருந்து இளம் வீரர்களுக்கு விரிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாங்கள் ஐந்து தசாப்தங்களாக கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளோம், இது விளையாட்டிற்கு திரும்பக் கொடுப்பதற்கான சிறந்த வழி என்று நம்புகிறோம். எங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கும் இதுவே சரியான வாய்ப்பாக இருக்கும்

அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன், சூப்பர் கிங்ஸ் அகாடமி உயர்தர பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளை வழிநடத்துவதில் முழுமையான அணுகுமுறையையும் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

தமிழத்தில் சிஎஸ்கே அணியால் 2 கிரிக்கெட் அகாடமிகள் நிறுவப்படுவது தொடர்பாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளருமான எல். பாலாஜி கூறுகையில், “இது சிஎஸ்கேவின் சிறந்த முயற்சி. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வளரும் கிரிக்கெட் வீரர்கள் நிச்சயம் பயனடைவார்கள். சேலத்தில் உள்ள அகாடமி அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கும் உதவும். நவீன கிரிக்கெட்டில், உங்கள் எல்லைகள் முக்கிய நகரங்களுக்கு மட்டும் வரக்கூடாது. இந்தியா ஏராளமான திறமைகளைக் கொண்ட ஒரு பரந்த நாடு. அவர்கள் வெளிப்பாட்டிற்கு தகுதியானவர்கள் என்று நான் உணர்கிறேன், அதைத்தான் இதன் [அகாடமி] மூலம் சிஎஸ்கே சாதிக்க முயற்சிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

துரைப்பாக்கத்தில் உள்ள அகாடமியில் அதிநவீன வசதிகள் உள்ளன. இதில் ஃப்ளட்லைட் வெளிப்புற மற்றும் உட்புற வலைகள் மற்றும் கான்கிரீட், உட்புறம் மற்றும் திறந்த வலை வசதிகள் தவிர அனைத்து நிலைமைகளுக்கும் தயார் செய்ய உதவும் பல்வேறு வகையான புல்வெளிகள் உள்ளன. மேட்ச் சிமுலேஷனுக்காக டர்ஃப் பிட்ச்களுடன் கூடிய மைதானமும் உள்ளது. மேலும், ஒரு உடற்பயிற்சி கூடம், கேண்டீன், கற்பவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பிற அத்தியாவசிய வசதிகளுடன் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அகாடமியில் ஃப்ளட்லைட் உடன் கூடிய பெரிய மைதானங்கள், முறையான பயிற்சி ஆடுகளங்கள், ஒரு பெவிலியன் மற்றும் ஊடக மையம் ஆகியவை உள்ளன.

சூப்பர் கிங்ஸ் அகாடமி ஒரு சிறந்த முயற்சி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். “இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன், அதைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இது பல இளைஞர்களுக்கு சில சிறந்த வசதிகள், சிறந்த பயிற்சிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன், பின்னர் அவர்களின் விளையாட்டை மேம்படுத்தி தரவரிசைக்கு வருவோம். இந்த அகாடமிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் ஐபிஎல்லில் சிஎஸ்கேக்காக விளையாடுவதை பார்ப்பது அருமையாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news csk announces super kings academies in salem chennai

Best of Express