‘இந்திய அணியின் வெற்றிக் கனவு, பகல் கனவாக மாறிப்போனது’ – கவாஸ்கர் கடும் சாடல்!

IND vs SA: Sunil Gavaskar said that India’s dream of winning their first Test series on South African soil had “turned into a nightmare” Tamil News: தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு “பகல் கனவாக மாறிவிட்டது” என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Cricket Tamil News: "Dream Turned Into A Nightmare": Sunil Gavaskar Cricket Tamil News: "Dream Turned Into A Nightmare": Sunil Gavaskar

Cricket Tamil News: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில், தொடரை கைப்பற்றபோவது எந்த அணி? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றது. இப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு “பகல் கனவாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

இந்த தொடர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் “கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டத்தின் மதிய உணவிற்குப் பிறகு இந்திய அணியினர் என்னைக் குழப்பிவிட்டனர். கடைசி முயற்சியாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரை பந்துவீசச் செய்வார்கள் என்று ஒருவர் நினைத்திருப்பார். ஏனெனில் ஒரு இடைவெளிக்குப் பிறகு, பேட்ஸ்மேன்கள் ரீசெட் ஆகுவது கடினம். அந்த தருணத்தில் அவர்களை பந்து வீசச் செய்து நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற கனவு தொடர் ஒரு பகல் கனவாக மாறியுள்ளது.

செஞ்சூரியனில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியாவின் உறுதியான வெற்றி, அவர்கள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறலாம் என நம்புவதற்கு வழிவகுத்தது. தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் “பலவீனம்” மற்றும் அவர்களின் “அனுபவமற்ற” பந்துவீச்சு வரிசை அதை உறுதி செய்திருந்தது.

முதல் டெஸ்டில் இந்தியா பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் அதுதான் டெம்ப்ளேட்டாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றிகளின் வித்தியாசம் பயங்கரமானது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரை புரிந்துகொள்வது கடினம். அந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய விதம், உண்மையில் அவர்களால் தொடரை வெல்ல முடியும் என்று நினைத்தேன். மேலும், 3-0 என்ற கணக்கில் எளிதில் வெல்வார்கள் என்றும் நினைத்திருந்தேன். ஏனெனில் தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் பலவீனம்.

தவிர, அந்த அணியின் முன்னணி வீரர் நார்ட்ஜே விளையாடாதது. இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெரிய பிளஸ் ஆகும். ஏனெனில் அவர்களிடம் அப்போது இரண்டு அனுபவமற்ற பந்துவீச்சாளர்கள் இருந்தனர்,” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket tamil news dream turned into a nightmare sunil gavaskar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com