Border - Gavaskar trophy 2023, Suryakumar Yadav Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் அறிமுகமானார். இந்தியாவுக்கான ஒயிட்-பால் வடிவத்தில் பல சாதனைகளை முறியடித்துள்ள அவருக்கு தற்போது ரெட்-பால் கிரிக்கெட்டிலும் தன்னை நிரூபிக்கும் வாய்ப்பும் கிடைத்துளள்ளது.
எனினும், இன்றைய ஆட்டத்தில் கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் ஒரு பவுண்டரி மட்டுமே விரட்டிய நிலையில், நேதன் லியான் பந்துவீச்சில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்ததார். இதனால், சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், அவரைத் தேர்வு செய்த இந்திய அணி நிர்வாகத்தையும் கடுமையாக சாடியுள்ளனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ஒரு ரசிகர், "சூரியகுமார் யாதவ் ஒரு அரிய திறமை. ஆனால் அவர் இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் திறன்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அவருக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு முன், அவர் அதை கற்றுக்கொள்ள வேண்டும். கில் ஒரு சிறந்த தேர்வாகத் தோன்றுகிறது. சர்ஃபராஸ் உள்நாட்டுப் போட்டிகளில் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டதோடு, டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு பெற தகுதியானவர்." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லுக்குப் பதிலாக சூர்யா எப்படி விளையாட முடியும்? மேலும், புஜாரா எப்படி தொடர்ந்து அணியில் இடம் பிடிக்கிறார்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்னொரு ரசிகர், "இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் தனது முதல் இன்னிங்ஸில் சூர்ய குமார் யாதவ் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் கோலியும் 12 ரன்களுக்கு சொற்பமாக வெளியேறினார்." என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil