scorecardresearch

‘உனது பந்தை நானே சிக்ஸர் அடித்தேன்’ பாக். வீரருடன் ஹர்பஜன் சிங் நேரடி மோதல்

Harbhajan Singh – Mohammad Amir involved in ugly slugfest on Twitter over India-Pakistan matches Tamil News: ஹர்பஜன் சிங் – முகமது அமீர் இடையே ட்விட்டர் பக்கத்தில் அரங்கேறிய வார்த்தைப்போர் இரு நாட்டு ரசிகர்களிடத்தில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cricket Tamil News: Harbhajan Singh, Mohammad Amir involved in ugly slugfest on Twitter over

Cricket Tamil News: 7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் -12 லீக் போட்டியில் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதோடு, உலக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியிடம் முதல் முறை வெற்றி கண்டது.

இந்நிலையில், வழக்கம் போல் பாகிஸ்தான் அணியுடன் தோல்வி கண்ட இந்திய அணி வீரர்களை ஒரு சாரார் சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசி வருகிறார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து பந்து வீச்சாளராக உள்ள முகமது ஷமியை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாகிஸ்தானின் முகமது அமீர் – இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இடையே ட்விட்டர் பக்கத்தில் வார்த்தைப்போர் அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு ஆரம்பித்த இந்த வார்த்தைப்போரில் முதலில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறித்து ஹர்பஜன் சிங் என்ன நினைக்கிறார் என்று அவரை டேக் செய்து ட்வீட் செய்தார்

அதற்கு பதிலளித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆசியக் கோப்பையில் முகமது அமீர் பந்தில், தான் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த வீடியோவைப் பதிவிட்டார்.

இந்த வீடியோ டிவீட்க்கு பதில் கொடுத்த அமீர் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 4 பந்தில், 4 சிக்ஸர்களை ஷாகித் அப்ரிடி பறக்க விட்ட வீடியோவை பகிர்ந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்த ஹர்பஜன் சிங், தான் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஷாகித் அப்ரிடியின் பந்துவீச்சில் சிக்ஸர் பறக்கவிட்ட வீடியோவை பகிர்ந்தார்.

அதோடு, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்டில் அமீர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட ஸ்டில் ஒன்றையும் பகிர்ந்தார்.

இப்படி இருவரும் மாறிமாறி டிவீட் செய்து வார்த்தைப்போர் நடத்தினர். இது இரு நாட்டு ரசிகர்களிடத்தில் மேலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news harbhajan singh mohammad amir involved in ugly slugfest on twitter over

Best of Express