IND vs SL: டி-20 கேப்டனாக ஹர்திக்? உறுதிப்படுத்திய உடனே ட்வீட்டை ‘டெலிட்’ செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் தொடருக்கு முன்னதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா தொலைக்காட்சி புதிய டி20 கேப்டன் குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

Cricket Tamil News: Hardik Pandya CAPTAIN? Star Sports Confirms New T20 skipper, IND vs SL
Hardik Pandya CAPTAIN? Star Sports ACCIDENTALLY Confirms New T20 skipper, DELETES tweet ahead of India vs SriLanka series Tamil News

IND vs SL series, Hardik Pandya Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணமாக வரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகள் மோதும் டி20 தொடர் வருகிற ஜனவரி 3 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 10 ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த தொடர்களுக்காக தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அணிகளில் வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ளர்.

டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சேத்தன் ஷர்மா தலைமையிலான வெளியேறும் தேர்வுக் குழு, நாளை (டிசம்பர் 27ஆம் தேதி) செவ்வாய்கிழமைக்குள், இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இரண்டு இந்திய அணிகளை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் தொடருக்கு முன்னதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா தொலைக்காட்சி புதிய டி20 கேப்டன் குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தற்செயலாக ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக உறுதிப்படுத்தி ட்வீட் செய்து இருந்தது. இருப்பினும், அந்த பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா அதன் ட்விட்டர் பதிவில், “ஆசிய டி20 சாம்பியன்களுக்கு எதிராக புத்தாண்டை தொடங்க ஹர்திக் பாண்டியா தயாராக உள்ளார்! BelieveInBlue & ஹர்திக் ‘ராஜ்’ கீழ் இந்த புதிய டீம் இந்தியாவின் சில செயல்பாடுகளைக் காண தயாராகுங்கள்.” என்று குறிப்பிட்டு இருந்தது.

இருப்பினும், தற்செயலாக புதிய கேப்டனை வெளிப்படுத்திய பின்னர், ட்வீட் அகற்றப்பட்டு சிறிது நேரம் கழித்து புதிய ட்வீட் வெளியிடப்பட்டது. அந்த புதிய ட்வீட்டில், “ஆசிய டி20 ஐ சாம்பியன்களுக்கு எதிராக புத்தாண்டை தொடங்க ஹர்திக் பாண்டியா தயாராக உள்ளார்! #BelieveInBlue & இந்த புதிய #TeamIndiaவில் இருந்து சில 🔥 செயல்பாடுகளைக் காண தயாராகுங்கள்” என்று பதிவிட்டது.

29 வயதான ஹர்திக் கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாடினார். அவர் அணியை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர் ஓய்வு எடுத்தார். தற்போது பெங்களூரில் உள்ள என்சிஏவில் பயிற்சி பெற்று வருகிறார். டி20 தொடரில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. இருவரும் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். இதேபோல் கட்டைவிரல் காயத்தில் இருந்து மீண்டு வரும் ரோஹித் சர்மா ஒருநாள் தொடருக்கு திரும்புவார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news hardik pandya captain star sports confirms new t20 skipper ind vs sl

Exit mobile version