scorecardresearch

5 ஆல்ரவுண்டர்கள்… சி.எஸ்.கே பெஸ்ட் பிளேயிங் 11 இதுதானா?!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

Cricket Tamil News: IPL 2023 Best playing 11 for CSK
IPL 2023, Best playing XI of Chennai Super Kings Tamil News

Chennai Super Kings Best playing 11 for IPL 2023 Tamil News: 10 அணிகள் களமாடும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31-ந் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஐ.பி.எல் தொடரில் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி மீண்டும் எம்.எஸ் தோனி தலைமையில் களமிறங்குகிறது. மினி ஏலத்தில் வாங்கப்பட்ட சில வீரர்களால் அணி எல்லா துறைகளிலும் சம நிலையில் உள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. தற்போது சி.எஸ்.கே அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவன் பற்றி இங்கு பார்க்கலாம்.


ருதுராஜ் கெய்க்வாட்

ரோல்: தொடக்க வீரர்
நாடு: இந்தியா<br>ஐபிஎல் அறிமுகம்: 2019
அதிகபட்ச ஸ்கோர்: 101*

டெவின் கான்வே

ரோல்: தொடக்க வீரர்
நாடு: நியூசிலாந்து
ஐபிஎல் அறிமுகம்: 2022
அதிகபட்ச ஸ்கோர்: 87

அம்பதி ராயுடு

ரோல்: பேஸ்ட்மேன்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2010
அதிகபட்ச ஸ்கோர்: 100*

பென் ஸ்டோக்ஸ்

ரோல்: ஆல்-ரவுண்டர்
நாடு: இங்கிலாந்து<br>ஐபிஎல் அறிமுகம்: 2017
அதிகபட்ச ஸ்கோர்: 107*

எம்.எஸ் தோனி</strong>

ரோல்: கேப்டன் – விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2008
அதிகபட்ச ஸ்கோர்: 84*

மொயின் அலி

ரோல்: ஆல்-ரவுண்டர்
நாடு: இங்கிலாந்து
ஐபிஎல் அறிமுகம்: 2018
அதிகபட்ச ஸ்கோர்: 107*

சிவம் துபே

ரோல்: ஆல்-ரவுண்டர்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2019
அதிகபட்ச ஸ்கோர்: 95*

ரவீந்திர ஜடேஜா

ரோல்: ஆல்-ரவுண்டர்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2008
பிபிஎம்: 5/16 (ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு)

முகேஷ் சவுத்ரி

ரோல்: வேகப்பந்து வீச்சாளர்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2022
பிபிஎம்: 4/46

தீபக் சாஹர்

ரோல்: வேகப்பந்து வீச்சாளர்
நாடு: இந்தியா
ஐபிஎல் அறிமுகம்: 2016
பிபிஎம்: 4/13

மகேஷ் தீக்ஷனா

ரோல்: ஸ்பின்னர்
நாடு: இலங்கை
ஐபிஎல் அறிமுகம்: 2022
பிபிஎம்: 4/33

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news ipl 2023 best playing 11 for csk

Best of Express