Advertisment

புதிய பலம் ஸ்டோக்ஸ்... ஆனாலும் சி.எஸ்.கே-வுக்கு இவ்வளவு பலவீனம் இருக்கிறதா?

ஸ்டோக்சின் பவர்-ஹிட்டிங் பேட்டிங் எப்படியான போட்டியிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும். மெதுவான சேப்பாக் ஆடுகளத்தில், அவரது மாயாஜால பந்துவீச்சு விக்கெட்டுகள் வீழ்த்த உதவும்.

author-image
WebDesk
New Update
Cricket Tamil News: IPL 2023, CSK SWOT Analysis

Chennai Super Kings: Strengths, Weaknesses, Opportunities And Threats Analysis in tamil

IPL 2023, Chennai Super Kings Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 31ம் தேதி முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் களமாடும் இந்தத் தொடரில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற அணியாக 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி உள்ளது. இதற்கு முதன்மைக் காரணமாக இருப்பவர் அந்த அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தான். அவரது தலைமையிலான சென்னை அணி தொடரில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், பல அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

Advertisment

இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான போட்டிகள் வழக்கம்போல் அணிகளின் சொந்த மைதானங்களிலும், எதிராணிகளின் மைதானங்களிலும் என மாறி மாறி நடக்கவுள்ளது. அவ்வகையில் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியின் கோட்டையாக இருந்து வரும் சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. இங்கு மட்டும் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. வருகிற ஏப்ரல் 3-ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால், ரசிகர்கள் அவர்களது உள்ளூர் அணியை உற்சாகப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த சீசனில் சென்னை அணியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று பலத்த அடி வாங்கியது. இதனால், ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவியை திரும்பப் பெற்ற தோனி, அணியை தொடர்ந்து வழிநடத்தினர். எனினும், தொடரின் முடிவில் 14 போட்டிகளில் 4ல் வெற்றி 10ல் தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்தது. இந்த பெரும் பின்னடைவில் இருந்து மீண்டு வர சென்னை அணி நிர்வாகவும் கேப்டன் தோனியும் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

publive-image

அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு இறுதியில் கொச்சியில் நடந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டர் வீரருமான பென் ஸ்டோக்ஸ் வாங்கினர். அவருடன் சில புதுமுக வீரர்களும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானேவையும் வங்கினார். அதன் மூலம் ஒரு வலுவான அணியை கட்டமைத்து வருகின்றனர். தற்போது அத்தகைய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.

பலம்

publive-image
பென் ஸ்டோக்ஸ்

சென்னை அணியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருப்பது அசுர பலத்தை கொடுத்துள்ளது என்று கூறினால் அது நிச்சயம் மிகையாகாது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கை சேர்ந்தவர். டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பதால் அவர் ஒரு "கேப்டன்" மெட்டிரியல் கூட.

அவரது பவர்-ஹிட்டிங் ஆட்டம் எப்படியான போட்டியிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும். மேலும், மெதுவான சேப்பாக் ஆடுகளத்தில், அவரது மாயாஜால பந்துவீச்சு விக்கெட்டுகள் வீழ்த்த உதவும். சில சமயங்களில் அவரது பந்துகள் பேட்டர்களை அவசரப்பட்டு ஆட தூண்டலாம். அது அவர்களது விக்கெட்டை பறிகொடுக்கும் நிலையை ஏற்படுத்தலாம்.

publive-image
மொயீன் அலி / ரவீந்திர ஜடேஜா

சேப்பாக்கத்தில் நடக்கும் 7 ஆட்டங்களில், ரவீந்திர ஜடேஜா அல்லது மொயீன் அலி ஆகிய இருவரில் ஒருவர் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. மேலும், சில பல விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணிக்கு வலு சேர்ப்பார்கள்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களான டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி மிகவும் செட்டில் ஆனா ஜோடிகளில் ஒன்றாகத் தெரிகிறார்கள். அம்பதி ராயுடு, ஸ்டோக்ஸ், தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். மறுபுறம், குறைந்த ஸ்கோரிங் ஆட்டங்களுக்கு, அவர்களிடம் அஜிங்க்யா ரஹானே இருக்கிறார். அவரை ஒரு 'இம்பாக்ட் பிளேயராக' பயன்படுத்தப்படலாம்.

publive-image
டெவோன் கான்வே / ருதுராஜ் கெய்க்வாட்

பலவீனம்

கடந்த சீசனில் சென்னை அணி தரப்பில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோல் தீபக் சாஹர், தொடர்ச்சியான முதுகு மற்றும் தொடை எலும்பு பிரச்சினையையும் கொண்டுள்ளார். கடந்த முறை முழு சீசனையும் தவறவிட்டதால், இன்னும் அவர் போட்டி நிலைமைகளில் சோதிக்கப்படாமல் இருக்கிறார்.

publive-image
தீபக் சாஹர்

சாஹரின் கடைசி காயம் கிரேடு 3 குவாட்ரைசெப்ஸ் கியர் ஆகும். மேலும் அவர் போட்டி சூழ்நிலையில் சோதிக்கப்படாவிட்டால் அவரது மறுவாழ்வு எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை அறிவது கடினம். அவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முக்கிய வீராகவும் இருக்கிறார். எனவே, அவரது காயம் சென்னை அணிக்கு அடுத்த பலவீனமாக இருக்கிறது.

வாய்ப்பு

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில், இளம் சிமர்ஜீத் சிங், ஏமாற்றும் வேகம் மற்றும் லசித் மலிங்காவின் 'அதிரடி டாப்பல்கேஞ்சர்' மதீச பத்திரனா ஆகியோர் தங்கள் பிரிவில் முத்திரை பதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பத்திரன தனது ஸ்லிங் ஆக்ஷன் பேட்டர்களுக்கு சிக்கலை உருவாக்கலாம் என்பதை சுருக்கமாக காட்டினார். சமீப காலமாக, அவர் இலங்கை அணியின் ஒரு பகுதியாக இல்லை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 லீக் (ILT20) போட்டியில் விளையாடி வருகிறார். ஆனால் சென்னை அணியைப் பொறுத்தவரை, அவர் தோனியிடம் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும். அவர் பொருத்தமாக இருந்தால், அணியின் ஆடும் லெவனில் நிச்சம் இடம் கிடைக்கும்.

publive-image
கேப்டன் தோனி

ஒரு தலைசிறந்த வியூகவாதியாக வலம் வரும் கேப்டன் தோனி, 'இம்பாக்ட் பிளேயர்' விதிகளை சிறப்பாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். பேட்டிங் இன்னிங்ஸின் போது அவர் 3 வெளிநாட்டு வீரர்களை எளிதாக களமிறக்க முடியும். பின்னர் பந்துவீச்சு இன்னிங்ஸின் போது 4வது வீரரை சேர்க்க முடியும். அப்படியானால், மிட்செல் சான்ட்னரைப் போன்ற ஒருவர் சேப்பாக் ஆடுகளத்தில் களமாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

அச்சுறுத்தல்

சென்னை அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அவர்களின் வயதான பிரிவு மற்றும் தோனி இன்னும் 2வது வரிசை சக்திவாய்ந்த இந்திய பேட்டர்களை உருவாக்கவில்லை என்பது தான். ராயுடு அல்லது ரஹானே போன்ற வீரர்கள் அதிக ஸ்கோர் செய்யும் ஆட்டங்களில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை விளையாடுவது கடினமாக இருக்கலாம்.

மற்றொரு பிரச்சினையாக அணியில் தரமான இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது தோனிக்கு கவலையாக இருக்கும். அதற்கு ஜடேஜாவின் சமீபத்திய டி20 சாதனையும் ஒரு காரணம். ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் நம்பர். 5 அல்லது 6ல் ஒரு வெளிப்பாடாக இருந்தாலும், டி20 கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவரது இடது கை சுழற்பந்து வீச்சு பற்றி இதையே கூற முடியாது.

பதிவுகளை ஒருவர் சரிபார்த்தால், ஜடேஜாவின் ஓவர் ஒதுக்கீட்டை தோனி பயன்படுத்தாததற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. U-19 உலகக் கோப்பை வென்ற நிஷாந்த் சிந்து மற்றும் சத்தீஸ்கரின் அஜய் மண்டல் போன்ற சில இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் தோனி நம்பிக்கை கொள்ளாவிட்டால், உயர் அழுத்தப் போட்டியில் ஒரு புதிய வீரரை முயற்சிப்பது சாத்தியமில்லை.

கடந்த ஆண்டு, தோனி மும்பை லெக்-ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கிக்கு இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கினார். ஆனால், அவரது மாநில அணி அவரை 2 சையத் முஷ்டாக் அலி டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாட வைத்தது. மேலும், அவரிடம் தரமான மேட்ச்-ப்ராக்டிஸ் இல்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Csk Ms Dhoni Chennai Csk Ravindra Jadeja Ben Stokes Ruturaj Gaikwad Moeen Ali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment