Advertisment

மிதாலிக்காக மூண்ட சண்டை: பெண் வர்ணனையாளருடன் மோதிய இந்திய வீராங்கனை

England Commentator Isabelle Westbury and former Indian cricketer VR Vanitha in war of words over Mithali Raj Tamil News: இந்திய மகளிர் அணியை வழிநடத்தி வரும் கேப்டன் மிதாலி ராஜ் குறித்து இங்கிலாந்து வர்ணனையாளர் பேசிய கருத்துக்கு இந்திய வீராங்கனை வலுவான பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cricket Tamil News: Isabelle Westbury and VR Vanitha in war of words over Mithali Raj

Cricket Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை (12ம் தேதி) நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்த நிலையில், இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 270 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 49 வது ஓவரின் முடிவில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தற்போது தொடரில் 2- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

publive-image

மிதாலிக்காக மூண்ட வார்த்தைப் போர்...

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணியை வழிநடத்தி வரும் கேப்டன் மிதாலி ராஜ் குறித்து இங்கிலாந்து வர்ணனையாளர் பேசிய கருத்துக்கு இந்திய வீராங்கனை வலுவான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதல் இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் (59 & 66) அடித்துள்ளார். ஆனால் அவரை, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும், வர்ணனையாளருமான 'இசபெல் வெஸ்ட்பரி' கடுமையாக விமர்சித்துள்ளார்.

இசபெல் வெஸ்ட்பரி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிதாலி ராஜ் தான் தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான விஷயமாக உள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் இந்திய வீராங்கனை விஆர் வனிதா, “அதில் 'சிறப்பான விஷயம்' மட்டுமே உள்ளது. இந்திய கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை விட, இங்கிலாந்தைப் பற்றி கவலைப்படுவது உங்களுக்கு நன்மை தரும். அவர்கள் தான் ஆஸ்திரேலிய அணியால் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர்" என்று பதிவிட்டார்.

அந்த பதிவிற்கு பதிலளித்த இசபெல் வெஸ்ட்பரி, "கூல் கூல், நான் உடன்படவில்லை. நிச்சயமாக அது சரிதானா? மிதாலி சிறப்பாக விளையாடியவர் தான். ஆனால், அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் பொருந்தாதவர். மேலும் அந்தக் கருத்தை நான் நிச்சயமாக வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறேனா?" என்று பதிவிட்டார்.

மேலும், "ஆம், என்னை நம்புங்கள், நான் இங்கிலாந்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். இந்த விஷயத்தில் எனது மிகச் சமீபத்திய வார்த்தைகள், நான் நம்புகிறேன்." என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த காரசார விவாதம் மேலும் தொடர்ந்தது. வனிதா சற்று ஆவேசமாக, “நீங்கள் எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள். விக்கிபீடியாவில் உங்கள் புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் உங்கள் (பிரிட்டன்) காலனித்துவ மனநிலையில் இருந்து இன்னும் நீங்கள் விடுபடவில்லை. நீங்கள் உங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளுங்கள் பிரிட்!!” என்று பதிவிட்டார்.

இங்கிலாந்து வர்ணனையாளர் 'இசபெல் வெஸ்ட்பரி' மற்றும் இந்திய வீராங்கனை வனிதா இடையே ஏற்பட்ட இந்த விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. மேலும், இந்திய வீராங்கனை வனிதாவுக்கு ஆதரவாக சமூக வலைதள பக்கங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

publive-image

வனிதா

இந்திய முன்னாள் வீராங்கனை வனிதா இந்திய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியவர். அதே சமயம், இங்கிலாந்து வர்ணனையாளர் மற்றும் முன்னாள் வீராங்கனை இசபெல் வெஸ்ட்பரி இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடியவர்.

publive-image

இசபெல் வெஸ்ட்பரி

மிதாலி ராஜ் முன்னிலை!

publive-image

மிதாலி ராஜ்

இதற்கிடையில் நேற்று வெளியாகிய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். அவருக்கும் (744 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலிக்கும் (749 புள்ளிகள்) இடையில் உள்ள புள்ளிகள் வித்தியாசம் வெறும் ஐந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Indian Cricket Womens Cricket Mithali Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment