ரோகித், கே.எல். ராகுலை விட இவர் பெஸ்ட்? டெஸ்ட் கேப்டன் பதவி சர்ச்சை
Rishabh Pant to replace Virat Kohli as India’s Test captain; Yuvraj Singh reacts after Sunil Gavaskar backs Tamil News: ரிஷாப் பண்ட் குறித்த சுனில் கவாஸ்கரின் கருத்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கவாஸ்கர் கூறிய கருத்திற்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.
Cricket Tamil News: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி நேற்று முன்தினம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார்.
Advertisment
Advertisement
அதில் அவர், "இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை நியமிக்கலாம். இளம் வீரரான ரிஷாப் பண்டுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கினால் அவர் 3 வடிவிலான போட்டியிலும் இன்னும் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும்." என்று தெரிவித்து இருந்தார்.
சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கவாஸ்கர் கூறிய கருத்திற்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "ரிஷப் பண்ட் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பது முற்றிலும் சரியானதுதான். ஏனென்றால், அவர் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று போட்டியை மிகச் சரியாக கணிக்கிறார்." என்று குறிப்பிட்டுள்ளார்.