scorecardresearch

‘கொலை மிரட்டல் வந்துச்சு, அசிங்கமா திட்டினாங்க’ – சிஎஸ்கே வீரர் டு பிளெசிஸ்

Received death threats after South Africa’s 2011 World Cup exit says Faf du Plessis Tamil News: உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், சமூக ஊடகங்களில் தன்னையும், தனது மனைவியையும் கடுமையாக விமர்சித்ததாகவும் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

Cricket Tamil News: Received death threats after South Africa’s 2011 World Cup exit says Faf du Plessis

Cricket Tamil News: ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஃபாஃப் டு பிளெசிஸ், தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்பவர். அந்த அணிக்காக 136 ஒரு நாள் போட்டிகளில் பேட்டை சுழற்றி 35 அரைசதம் மற்றும் 12 சதங்களை விளாசி 5507 ரன்களை குவித்துள்ளார். அதோடு, 69 டெஸ்ட்களில் 4163 (10 சதம், 21 அரைசதம்) ரன்களையும், 50 டி-20 போட்டிகளில் 1528 (1 சதம், 10 அரைசதம்) ரன்களையும் குவித்துள்ளார்.

சமீபத்தில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14வது சீசனில், சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தார். நடந்த 7 போட்டிகளில் 4 அரைசதம் கடந்த அவர் 320 ரன்கள் குவித்து அசத்தினார்.

போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், தற்போது சொந்த மண் திரும்பியுள்ள டு பிளெசிஸ், 2011ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது தனக்கு நடந்த மோசமான மற்றும் கசப்பான சம்பவம் குறித்தது மனம் திறந்து பேசியுள்ளார்.

2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியை எந்தவொரு இந்திய ரசிகரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஒரு நெகிழ்ச்சி ததும்பும் சம்பவம் எனலாம். இந்த போட்டியில் இலங்கை அணியை தும்சம் செய்த கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கையில் ஏந்தியது.

இது ஒரு புறம் இருக்க, இந்த உலகக்கோப்பை தொடரில் நடந்த 3 வது காலிறுதி போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் நடந்தது. இதில் டேனியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 221 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் கண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கததால் 172 ரன்களிலேயே சுருண்டது.

அந்த அணி 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது அணியின் நம்பிக்கை நாயகன் டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த டு பிளெசிஸ் அணியை கரை சேர்ப்பார் என நினைக்கையில் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் இந்த ஆட்டத்தின் போது ரன் எடுக்க வேகமாக ஓட முயன்ற டு பிளெசிஸ் நியூசிலாந்து வீரர் கெயில் மில்ஸை தள்ளி விட்டார். இதனால் அவருக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 50% அபராதமாக செலுத்தினார்.

ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோவுடனான சமீபத்திய உரையாடலில், டு பிளெசிஸ் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் சமூக ஊடகங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“உலகக் கோப்பை தொடரிலிருந்து எங்கள் அணி வெளியேறிய பிறகு எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. என் மனைவிக்கு அச்சுறுத்தல் வந்தது. சமூக ஊடகங்களில் எங்கள் இருவரையும் கடுமையாக விமர்ச்சித்தனர். என் மீது தனிநபர் தாக்குதலை தொடர்ந்தனர். அதோடு சில மோசமான சில விஷயங்களும் கூறப்பட்டன.

இது போன்ற சம்பவங்கள் உங்களை மக்களிடமிருந்து தனிமையாக இருக்க வைக்கிறது. இந்த கடினமான சூழலை எல்லா வீரர்களும் கடந்து செல்ல தான் வேண்டும். மேலும் இது நம் வட்டத்தை மிகச் சிறியதாக வைத்திருக்கும்படி நம்மைத் தூண்டுகிறது. அதனால்தான் எங்கள் அணிக்குள் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதில் நான் மிகவும் கடினமாக உழைத்தேன்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news received death threats after south africas 2011 world cup exit says faf du plessis