scorecardresearch

3 வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்… வரலாறு படைத்த ரோகித் அண்ட் கோ!

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள நிலையில் தற்போது டெஸ்ட் அணிகள் தரவரிசையிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Cricket Tamil News: Rohit Sharma-led India No. 1 in all three formats
ICC Rankings: India script history, Rohit Sharma and Co become World No 1 in all three formats for first time

ICC Rankings, Rohit Sharma-led India No. 1 in all three formats Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணியாக இந்தியா வலம் வருகிறது. இந்நிலையில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா ஏற்கனவே நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் 3-0 என்ற கணக்கில் வெற்றியுடன் 50 ஓவர் வடிவத்தில் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது சமீபத்திய புதுப்பித்தலின் மூலம், மூன்று வடிவங்களிலும் உலகின் நம்பர் ஒன் தரவரிசையில் முதல் அணியாக இந்தியா உள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 115 புள்ளிகளுடன், இந்தியா இப்போது புதிய உலகின் நம்பர் ஒன டெஸ்ட் அணி என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளையும் இந்தியா வென்றால் அது தொடர்ந்து முதலிடத்திலே நீடிக்கும். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் நுழையும்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியா 114 ரேட்டிங் புள்ளிகளையும், டி20 போட்டிகளில் 267 ரேட்டிங் புள்ளிகளையும் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news rohit sharma led india no 1 in all three formats