Cricket Tamil News: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ம் தேதி துவங்கி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. தற்போது 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த தொடரில் நடந்த 2 டெஸ்ட்களில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் சேதேஷ்வர் புஜாரா தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த ஆட்டத்தை அவர் தொடர்ந்தால் நிச்சயம் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும், அவரின் இந்த அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

இந்நிலையில், புஜாரா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, ‘புஜாராவை விமர்சிப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “புஜாரா கடந்த சில தொடர்களாகவே சிறப்பாக செயல்படவில்லை என்று அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ஆனால் சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் அமைத்த பாட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது. ஆஸ்திரலிய தொடரிலும் புஜாரா சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது கூறப்படும் விமர்சனம் ஏற்புடையதல்ல” என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil