India vs Australia series, Suryakumar Yadav - Sarfaraz Khan Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்த நிலையில், அதில் மும்பை வீரர் சர்பராஸ் கான் பெயர் இல்லாததால் ரசிகர்கள், நிபுணர்கள் மற்றும் மூத்த கிரிக்கெட் வீரர்கள் தங்களது கோப்பைத்தை வெளிப்படுத்தினர். பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினர்.
இதற்கு காரணம், ரெட்-பால் கிரிக்கெட்டில் சூரியகுமாரின் நிலையை ஒப்பிடும்போது ரஞ்சி டிராபியில் சர்பராஸின் ரன் குவிப்பு தான். 25 வயதான சர்பராஸ் கான் 2019/20 சீசனில் 154.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 928 ரன்களும், 2021/22 சீசனில் 122.75 ஸ்ட்ரைக் ரேட்டில் 982 ரன்களும், நடப்பு சீசனில் 500 ரன்களுக்கு மேல் சராசரியாக 92 ரன்களும் எடுத்துள்ளார். மறுபுறம் சூரியகுமார் அதில் எதையுமே செய்யவில்லை. கடந்த டிசம்பரில் ரஞ்சி டிராபி போட்டியில் அவர் 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தது வரை கடந்த மூன்று ஆண்டுகளில் ரெட்-பால் கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடவில்லை.
இந்நிலையில், மும்பைக்கான உள்நாட்டுப் போட்டிகளில் சூரியகுமாருடன் அதே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்ளும் சர்பராஸ் கான், சூரியகுமாரின் தேர்வு குறித்த தொடர்ச்சியான விமர்சனத்தில் தனது மவுனத்தை உடைத்துள்ளார்.
சூரியகுமாரின் தேர்வு குறித்தும், அவரது இந்திய அணிக்கான காத்திருப்பு நேரம் உத்வேகம் அளிக்கிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, சர்பராஸ் அவர்கள் ஒரு நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "வெளிப்படையாக அது (அவரது தேர்வு உத்வேகமாக இருப்பது) உள்ளது. சூரியகுமார் எனது நல்ல நண்பர். நாங்கள் ஒன்றாக அணியில் இருக்கும்போது ஒன்றாக நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் விளையாடும் விதம், அவர் தனது அனுபவத்தை ஒன்றாக எடுத்துக்கொண்டார். அதனால் அவருக்கு விஷயங்களை எளிதாக்குகிறது." என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம், தனியார் செய்தி இதழுக்கு சர்பராஸ் கான் அளித்த பேட்டியில், “அணி அறிவிக்கப்பட்டதும், என் பெயர் இல்லாதபோது, நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்த உலகில் என் இடத்தில் உள்ள எவரும் சோகமாக இருந்திருப்பார்கள். ஏனென்றால் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நேற்று, நாங்கள் கவுகாத்தியிலிருந்து டெல்லிக்கு பயணித்தபோது, நாள் முழுவதும் நான் சோகமாக இருந்தேன். என்ன, ஏன் நடந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். நானும் அழுதேன்,” என்று அவர் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.