Advertisment

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீராங்கனை!

Indian cricketer Smriti Mandhana’s register’s her 1st Century against Aus in pink ball test Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.

author-image
WebDesk
Oct 01, 2021 17:12 IST
New Update
Cricket Tamil News: Smriti Mandhana Hits Century against Aus in pink ball test

Smriti Mandhana Tamil News: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பிங்க் பந்து டெஸ்ட்) கராரா ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது.

Advertisment
publive-image

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி களமிறங்கியது. அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 51 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இந்த அரைசதத்தின் மூலம், 2013-க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில், குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரை சதம் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது.

publive-image

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது, மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. அப்போது, இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும், தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஸ்மிரிதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மேலும் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 127 ரன்கள் (216 பந்துகளில், 22 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட) குவித்து ஆட்டமிழந்தார்.

25 வயதான இந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளது மேலும், வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கன, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமைகளையும் அவர் சொந்தமாக்கியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India Vs Australia #Sports #Cricket #Ind Vs Aus #Womens Cricket #Smiriti Mandhana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment