/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152332.049.jpg)
Steve Smith Tamil News: ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரராகவும் உலகின் தலைசிறந்த வீரராகவும் வலம் வருபவர் ஸ்டீவ் ஸ்மித். மைதானத்தில் மிகவும் துடிப்பான வீரராக காணப்படும் ஸ்மித் தான் சந்திக்க உள்ள ஒவ்வொரு பந்திற்கு முன்னதாகவும் துறுதுறுவென இருப்பார். தவிர, எப்பேர்ப்பட்ட பந்து வீச்சாளரையும் அசால்ட்டாக எதிர்கொண்டு அவர்கள் வீசும் பந்துகளை பவுண்டரி கோடு நோக்கி விரட்டுவார்.
3 பார்மெட் கிரிக்கெட்டிலும் தனக்கே உரித்தான பாணியை பயன்படுத்தி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் ஸ்மித், டெஸ்ட் தரவரிசையில் பல ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். இவரது விக்கெட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனபதே பல பந்து வீச்சாளர்களின் கனவாக இருந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152257.584.jpg)
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய 4 பவுலர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் பதில் அளித்துள்ளார். இதில் அவர் முதலில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை தேர்வு செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152603.706.jpg)
இதுவரை 163 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 621 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தற்போது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர்கள் பட்டியலில் உள்ள இந்திய வீரர் அனில் கும்ளேவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152636.266.jpg)
ஸ்மித் தனது 2வது தேர்வாக சக நாட்டு வீரர் பேட் கம்மின்ஸ்ஸை குறிப்பிட்டுள்ளார். கம்மின்ஸ் பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் சரியான லென்த்தில் தொடர்ந்து சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை சரித்துள்ளார். அதோடு பல நேரங்களில் அணியின் வெற்றிக்கு வித்திட்ட வீரராகவும் உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152612.416.jpg)
3வது வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீர்த் பும்ராவை குறிப்பிட்டுள்ள ஸ்மித் அவரின் துல்லியமான பந்து வீச்சு குறித்து விவரித்துள்ளார். பும்ரா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித்-தின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். தவிர, பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு தனது சிறப்பான பந்து வீச்சால் நெருக்கடி கொடுத்து ஆட்டமிழக்க செய்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T152648.824.jpg)
4வது வீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் பெயரை ஸ்மித் கூறியுள்ளார். கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களின்போது ரபாடா பந்துவீச்சில் ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T154117.682.jpg)
"சிறந்த நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வது கடினம் தான். அந்த அளவுக்கு தற்போது அற்புதமான பவுலர்கள் உலக அளவில் உள்ளனர். இருப்பினும் ஆண்டர்சன், கம்மின்ஸ், பும்ரா, ரபாடா ஆகியோர் சிறந்த பவுலர்களாக இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.