Advertisment

'இந்தியாவின் 360 வீரர் இவர்தான்' - ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளம் வீரர்!

Suryakumar Yadav is india’s 360 cricketer fans on social media Tamil News: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், வீசப்பட்ட பந்துகளை மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓட விட்ட சூர்யகுமார் யாதவை 'இந்தியாவின் 360 கிரிக்கெட் வீரர் இவர் தான்' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
Jul 21, 2021 16:09 IST
Cricket Tamil News: Suryakumar Yadav is india’s 360 cricketer fans on social media

Cricket Tamil News: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisment

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 275 எடுத்தது. அந்த அணியில் அதிகட்பசமாக அசலங்கா 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களம் இந்திய அணி 12 ஓவர்களுக்குளேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், பின்னர் களமிறங்கிய மனீஷ் பாண்டே (37), சூர்யகுமார் யாதவ் (53) அதிரடி கலந்த நிதான ஆட்டத்தால் 160 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இவர்களின் விக்கெட்டுக்கு பின்னர் வந்த க்ருனல் பாண்ட்யா மற்றும் தீபக் சஹார் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்து. வாணிந்து ஹசரங்கா வீசிய 35.1 ஓவரில் அவரிடம் கேட்ச் கொடுத்த க்ருனல் பாண்ட்யா 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் கண்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்த தீபக் சஹார் 50 வது 5 பந்துகள் மீதமிருக்க 276 ரன்கள் கொண்ட இலக்கை எட்டிப்பிடித்தது.

publive-image

இந்த போட்டியில் குறிப்பிடும் படியாக இந்திய அணியின் இளம் வீரர்கள் இருவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அதில் அணிக்காக நிதானமாக ஆடி அணி வெற்றி பெறவும், தொடரை கைப்பற்றவும் உதவிய தீபக் சஹார் ஒருவர் என்றால், அணிக்கு தேவையான ரன்களை சரியான நேரத்தில் 360 டிகிரி கோண அளவில் சுழன்று விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றொருவர் ஆவார்.

publive-image

இந்திய அணி 12 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த இக்கட்டான தருணத்தில் களம் கண்ட சூர்யகுமார் மறுமுனையில் இருந்த மனிஷ் பாண்டே உடன் சிறப்பான ஜோடி அமைத்தார். இருப்பினும், மணிஷ் பாண்டே அணி 115 ரன்களை எட்டிய போது 37 ரன்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

publive-image

இப்படி விக்கெட் ஒரு பக்கம் சரிந்தாலும் தனது பாணியை தொடர்ந்து சூர்யகுமார் 44 பந்துகளில் 6 பவுண்டரிகளை ஓடவிட்டு சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 53 ரன்களில் சூர்யகுமார் ஆட்டமிழந்து இருந்தாலும், கொழும்பு மைதானத்தில் அவர் காட்டிய பேட்டிங் பாணி கண்களை விட்டு இன்னும் நீங்காமல் உள்ளது. அந்த அளவிற்கு மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்துகளை ஓட விட்டார். தவிர, ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி, ஆப் சைடில் பவுண்டரி, ஸ்வீப் ஷாட், அப்பர் கட் என ஐபிஎல் தொடரரில் விளாசுவது போல வித்தை காட்டினார்.

publive-image

இவரின் இந்த ஆட்டத்தை கண்ட ரசிகர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும் அவரை புகழ்ந்து தள்ளினர். மேலும், பீல்டர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று தெரிந்து அந்த கேப்பை பயன்படுத்தி விளையாடிய சூர்யகுமாரை, 'இந்தியாவின் 360 கிரிக்கெட் வீரர் இவர் தான்' என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

#Cricket #Sports #Indvssl #India Vs Srilanka #Sport #Suryakumar Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment