Cricket tamil news: செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு முன் வீரர்கள் ஆறு நாட்களுக்கு மும்பையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் டெல்லி, மும்பை, ஹரியானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய ஆறு அணிகள் அணியைச் சேர்ந்த வீரர்கள் அடங்குவர். அங்கு வழங்கப்படும் உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லை என தங்கி இருக்கும் வீரர்கள் புகார் அளித்துள்ளனர்
அந்த ஓட்டலில் டெல்லியை அணியை சேர்ந்த ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, கேரளா அணியை சேர்ந்த எஸ்.ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், மற்றும் மும்பை அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, தவால் குல்கர்னி போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கி உள்ளனர்.
இது பற்றி மும்பை அணியின் மேலாளர் கூறுகையில்,
“ கடந்த இரண்டு நாட்களாக இங்கு வழங்கப்படும் உணவின் அளவு மற்றும் தரம் குறைவாக இருப்பதாக வீரர்கள் எங்களிடம் புகார் கூறினர். வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த இங்கு வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை. இங்கு இருக்கும் வீரர்கள் ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தான் விளையாடுவார்கள், இந்த உணவு அந்த வீரர்களுக்கு எந்த வகையிலும் அவர்களுக்கு உதவாது ” என மும்பை அணியின் மேலாளர் மாலிக் கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழு அங்கு தங்கி இருந்த மூன்று அணியில் உள்ள பத்து வீரர்களின் கேட்டது அதற்கு அவர்கள், ஓட்டலில் வழங்கப்படும் எந்த வேளை உணவும் அளவிலும் தரத்திலும் மற்றும் உண்ணும் வகையிலும் இல்லை. இது பற்றி அணியின் மேலாளர்கள் உணவு சரியில்லை என புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதோடு உணவு தாமதமாகவும் வழங்கப்படுகின்றது. இது குறித்து இந்திய வாரியத்திடம் புகார் அளித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
"இங்கு வழங்கப்படும் ரொட்டி அப்பளம் போல உள்ளது. இவர்கள் வழங்கும் அரிசி சாதம் இங்குள்ள எந்த வீரரும் சாப்பிடுவதில்லை குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்கள். எங்களுக்கு ஒரு முட்டை அல்லது ஒரு வறுத்த கோழி வழங்கினாலே போதுமானது" என பெயர் சொல்ல விரும்பாத வீரர் ஒருவர் கூறியுள்ளார்
ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வெளியில் சென்று உணவருந்த முடிவதில்லை. அறையில் இருந்து ஆர்டர் செய்தால் விலை அதிகம் உள்ளது என மற்றொரு வீரர் கூறுகிறார்
வீரர்கள் தங்குவதற்காக பி.சி.சி.ஐ. அந்த ஓட்டலில் 90 அறைகளை பதிவு செய்துள்ளது. வீரர்கள் அளித்துள்ள புகார்களை சரி செய்வதாக அணிகளின் நிர்வாகிகளுக்கு உறுதியளித்துள்ளது. இந்திய வாரியம் நடத்தும் இந்த ஆண்டு தொடரில் வீரர்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு வழங்குவதோடு அவர்களுக்கு கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறையை கட்டமைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"