Former Indian Cricketer Venkatesh Prasad - Sarfaraz Khan Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதன், குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை அணியில் களமாடி விளையாடி வருகிறார் சர்பராஸ் கான்.
இவர் நடப்பு சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, நேற்று டெல்லிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், அந்த கடுங் குளிரிலும் அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் சதம் விளாசி மிரட்டினார். மேலும், தனது அபார ஆட்டத்தை கைவிடாத அவர் 155 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்தார்.
25 வயதான சர்பராஸ் கான் கடந்த சீசனில், 6 ஆட்டங்களில் 4 சதங்கள் உட்பட 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்தார். நடப்பு சீசனில் கடைசி 5 ஆட்டங்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 431 ரன்களை எடுத்துள்ளார். ஆனாலும், அவரை இந்திய அணி நிர்வாகம் இந்தியாவுக்கு விளையாட அழைப்பு கொடுக்கவில்லை.
அண்மையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) சொந்த மண்ணில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளை அறிவித்தது. இதில் ஒரு அணியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், டெஸ்ட் அணிக்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
இதனால், இடிந்து போன சர்பராஸ் கான் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விலகிய உடன் தனது தொடையில் தட்டி மிரட்டல் விடுத்தார். அவரது இந்த அசத்தல் ஆட்டத்தை கண்ட அவரது பயிற்சியாளர் தனது தொப்பியைக் கழற்றி பாராட்டி தெரிவித்தார்.
2019 முதல் ரஞ்சி கோப்பையில் சர்பராஸ் கான் குவித்த ரன்கள்:
71, 36, 301, 226, 25, 78, 177, 6, 275, 63, 48, 165, 153, 40, 59, 134, 45, 5, 126*, 75, 20, 111 *, 28*, 125.
இந்நிலையில், சர்பராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், அவரால் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சதங்களை அடிக்க முடியும் என்றால், அவரது உடற்தகுதி பெரிய விஷயம் இல்லை என்றும், ஆனால் முதல் தர கிரிக்கெட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது ஏன்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
"3 பிளாக்பஸ்டர் உள்நாட்டு சீசன்கள் இருந்தபோதிலும் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்காதது சர்பராஸ் கானுக்கு அநியாயம் மட்டுமல்ல, உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு இது ஒரு துஷ்பிரயோகம். கிட்டத்தட்ட இந்த தளம் ஒரு பொருட்டல்ல. மேலும் அந்த ரன்களை எடுக்க அவர் தகுதியானவர். உடல் எடையைப் பொறுத்த வரையில், அதிக கிலோவுடன் பலர் உள்ளனர்” என்று வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தை தொடங்குவதற்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சர்பராஸ் கான், அவரது தந்தையின் வருகை நிலைமையைப் பற்றி நன்றாக உணர உதவியது.
Hundred and counting! 💯
Yet another impressive knock from Sarfaraz Khan 👏👏
Follow the Match ▶️ https://t.co/sV1If1IQmA#RanjiTrophy | #DELvMUM | @mastercardindia pic.twitter.com/GIRosM7l14— BCCI Domestic (@BCCIdomestic) January 17, 2023
"நான் முற்றிலும் உடைந்து போய் இருந்தேன். எவருக்கும் இது இயற்கையானது, குறிப்பாக நீங்கள் அதிக ரன்கள் எடுத்தால். நானும் மனிதன் தான், இயந்திரம் அல்ல. எனக்கும் உணர்ச்சிகள் உண்டு. நான் என் தந்தையிடம் பேசினேன், அவர் டெல்லிக்கு வந்தார். நான் அவருடன் டெல்லியில் பயிற்சி அமர்வில் விளையாடினேன். நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு செய்திகள் வருகின்றன.
என் தந்தை வந்து, ரன் அடிப்பதே எனது வேலை, நான் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு நாள் வரும் என்று அவர் உணர்கிறார். எனவே அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும், மற்றதை விதி தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்." என்று சர்பராஸ் கான் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.