2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் 2023 முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனான எம்.எஸ் தோனி தனது கேப்டன் மற்றும் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளார். தோனி தனது முடிவை அதிகாரப்பூர்வமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெரிவிக்கவில்லை என்றாலும், அணி நிர்வாகத்தில் உள்ள புரிதல் என்னவென்றால், சேப்பாக்கத்தில் அவர் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்பது தான். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு தோனி தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள சி.எஸ்.கே நிர்வாகத்தின் அதிகாரி “அவருக்குப் பிடித்த மைதானத்தில் அவர் விடைபெற விரும்புவதால் அதுவே அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியிருந்தாலும், ஐபிஎல் தொடங்குவதற்குள் எங்களுக்கு தெளிவு முடிவு கிடைத்து விடும்.
எம்எஸ் தனது முடிவைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக, எந்த நேரத்திலும் அழைப்பை எடுக்க அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. அவர் எங்கள் தலைவர், அவர் அணிக்கு சிறந்ததை மட்டுமே செய்வார். நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், இந்த சீசனுக்கு அப்பாலும் தொடர விரும்புகிறாரா என்பதில் அவருக்கு முழு ஆதரவு உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் தோனி சிஎஸ்கே கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால், ஜடேஜாவின் கேப்டன்சி தோல்வி தோனியை மீண்டும் பொறுப்பேற்க கட்டாயப்படுத்தியது. இதனால், இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை அவரே ஏற்கொள்வாரா? அல்லது வேறு யாரிடமாவது ஒப்படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன. அதோடு, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அடுத்த தலைமுறை கேப்டன்சி விருப்பமும் உள்ளது.
இந்த மூன்று விருப்பங்களில் ஸ்டோக்ஸ் முன்னணியில் இருக்கும் நிலையில், அவரது நிபந்தனைக்குட்பட்ட (NOC) போட்டியில் விளையாடுவது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். மேலும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செய்யப்பட்டு வரும் அவரால் ஒவ்வொரு சீசனிலும் ஐபிஎல்-லின் முழு தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை. எனவே, ஸ்டோக்ஸும் தோனியும் சென்னை அணியின் எதிர்காலத்தை மேம்படுத்தக்கூடிய இந்திய விருப்பத்தை பார்க்கக்கூடும். அதற்கு ருதுராஜ் கெய்க்வாட் சரியான வீரராக இருப்பார். ஏன்னென்றால், அவர் ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவை மாநில கிரிக்கெட் அணியை வழிநடத்தி வருகிறார்.
சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் யார்?
பென் ஸ்டோக்ஸ்
அஜிங்க்யா ரஹானே
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் ஒரு இந்திய வீரர் என்பதால் ஐபிஎல் உரிமையானது அதிக அளவில் முதலீடு செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அவர் ஏற்கனவே உள்நாட்டு தொடர்களில் மகாராஷ்டிரா அணியை வழிநடத்தி வருகிறார்.
தோனி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோருடன் நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளெமிங்குடன், அவருக்கு நிறைய இன்புட்ஸ் கிடைக்கும். மேலும், சென்னை அணியின் அடுத்த தலைமுறை கேப்டனாகவும் இருப்பார்.
பரந்த அனுபவம் மற்றும் இயல்பான தலைமைப் பண்புகளுடன் பென் ஸ்டோக்ஸ் முன்னணியில் இருந்தாலும், அவரது நிபந்தனைக்குட்பட்ட NOC ஒரு சிக்கலாக இருக்கலாம். பென் ஸ்டோக்ஸுடன், சிஎஸ்கே இரண்டு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. ஒன்று அவர் வெளிநாட்டு வீரர், 2வது அவர் ஒரு ஆல்ரவுண்டர். பென் ஸ்டோக்ஸ் எல்லா போட்டியிலும் பந்துவீசக்கூடாது அல்லது குறிப்பிட்ட ஓவர்கள் மட்டுமே பந்துவீச வேண்டும் என்ற நிபந்தனையுடன் NOC பெறுவார். எனவே, சிஎஸ்கே சில ஆட்டங்களில் அவரை வெளிநாட்டு பேட்டராக விளையாட வேண்டும்.
அஜிங்க்யா ரஹானேவும் மற்றொரு விருப்பம், ஆனால் அவருக்கு சென்னை அணியின் ஆடும் லெவனில் உத்தரவாதமான இடம் இல்லை. மேலும் அவருக்கு வயதும் இல்லை.
"நிச்சயமாக, பென் ஸ்டோக்ஸைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஒரு மேட்ச் வின்னர் மட்டுமல்ல, சிறந்த தலைவரும் கூட. தோனி தனது வாரிசாக யாரை பெயரிடுவார் என்பது அவரின் முடிவு தான். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் முன்னணியில் இருப்பதால், எப்போதும் இணைவதில் சிக்கல் உள்ளது. கூடுதலாக, ஆல்-ரவுண்டர்கள் எப்போதும் கையாளுவதற்கு தந்திரமானவர்கள். பென் அடுத்த ஆண்டு NOC பெறவில்லை என்றால், அது ஒரு பிரச்சனையாக இருக்கும். எனவே, ஒரு இளம் ருதுராஜை ஒருபோதும் நிராகரிக்க முடியாது, ”என்று சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.