‘உலககோப்பை டி20 அணியில் இந்த 15 பேருக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கனும்’ – முன்னாள் வீரர் ஜஹீர் கான் கருத்து

Former indian cricketer Zaheer Khan reveals his 15-man India’s squad for t20 World Cup Tamil News: இந்தாண்டு இறுதியில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜஹீர் கான்.

Cricket Tamil News: Zaheer Khan reveals his 15-man India's squad for t20 World Cup

T20 World Cup 2021 latest Tamil News: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை நாடு முழுதும் வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தொற்று பரவலரால் நாட்டின் பல துறைகள் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதில் விளையாட்டு துறையும் ஒன்று என்றால் நிச்சயம் மிகையாகாது. ஏனென்றால் நாடு முழுதும் பரவிய இந்த தொற்றால் பல தொடர்கள், விளையாட்டு போட்டிகள் என அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதோடு, ரத்தும் செய்யப்பட்டன. இதில் இந்திய மண்ணில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரும் உள்ளடங்கும்.

பிசிசிஐ-யால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து 7வது டி20 உலகக்கோப்பை தொடரும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதன் முதலாவது தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தி இருந்தது இந்திய அணி. ஆனால் அதன்பிறகு நடந்த ஒரு டி20 உலக கோப்பையை கூட இந்திய அணி கைப்பற்றவில்லை. இந்த உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை வென்றுள்ள நிலையில் இந்திய அணியும் 2வது முறை வெல்ல நிச்சயம் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. தவிர, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வெல்லவில்லை. எனவே, இந்திய அணி கடுமையாக முயற்சித்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தயார் படுத்தி வரும் நிலையில் இந்திய அணியும் அதன் டி20 உலக கோப்பை அணியை உருவாக்க உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்களில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அணியின் தேர்வு எவ்வாறு அமைய போகிறது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஹீர் கான் இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை கழட்டி விட்டுள்ளார். இந்த அணியில் ரோகித் மற்றும் கே.எல் ராகுல் தொடக்க வீரர்களாகவும், மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியயோரையும் தேர்வு செய்துள்ளார்.

இதேபோல், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள அவர் ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சாளர்களாக தீபக் சாஹர், பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், வருன் சக்ரவர்த்தி, சாஹல், நடராஜன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஜாஹீர் கான் தேர்வு செய்த உலகக் கோப்பை டி20 அணி

1) ரோஹித் சர்மா
2) கே. ராகுல்
3) விராட் கோலி
4) சூரியகுமார் யாதவ்
5) இஷான் கிஷன்
6) ரிஷப் பண்ட்
7) ஹார்டிக் பாண்டியா
8) ரவீந்திர ஜடேஜா
9) பும்ரா
10) தீபக் சாகர்
11) புவனேஷ்வர் குமார்
12) முகமது ஷமி
13) சாஹல்
14) வருண் சக்ரவர்த்தி
15) நடராஜன் அல்லது வாஷிங்க்டன் சுந்தர்

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket tamil news zaheer khan reveals his 15 man indias squad for t20 world cup

Next Story
டோக்கியோ ஒலிம்பிக் : அரையிறுதியில் கால்பதித்த பி.வி.சிந்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com