18 ரன்களுக்கு ஆல் அவுட்… 12 நிமிடத்தில் சேஸிங்!

18 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெக்கன்ஹாம் அணி

By: Updated: July 24, 2018, 05:48:19 PM

இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், பெக்கன்ஹாம் அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 18 ரன்களை 12 நிமிடங்களில் எதிரணி சேஸிங் செய்ய, ஆட்டம் ஒரு மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில் ஷெப்பார்ட் நீம் கென் கிரிக்கெட் கிளப் சார்பில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெக்கன்ஹாம் சிசி அணிக்கும், பெக்ஸ்லே சிசி அணிக்கும் இடையே நேற்று போட்டி நடந்தது. இதில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த பெக்கன்ஹாம் சிசி அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியில் 5 பேர் டக் அவுட் ஆனார்கள். மற்றவர்களில் அலெக்சாண்டர் சென்(4), வில்லியம் மேக் விகர் (4), காலோம் லென்னாக்ஸ் (4), ஜோஹன் மால்கம் (1), ஆசாத் அலி (1), ஜுனைத் நதிர்(1) என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

பெக்ஸ்லே அணியின் ஜேஸன் பென் வீசிய 5.2 ஓவர்களில் 3 மெய்டன் உள்ளிட்ட 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், காலம் மெக்லாட் 6 ஓவர்களில் 2 மெய்டன் உள்பட 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

5 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த பெக்கன்ஹாம் அணி, அடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்தது. இதைத் தொடர்ந்நு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெக்ஸ்லே அணியின் கிறிஸ்டோபர்(4), எய்டன் கிக்ஸ்(12) ரன்கள் சேர்த்து 3.3 ஓவர்களில் 12 நிமிடங்களில் சேஸிங் செய்தனர். இதில் பெக்கன்ஹாம் அணி, தனது பந்துவீச்சில் 6 எக்ஸ்டிரா ரன்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கவுண்டி அணி வரலாற்றில் குறைவாக எடுக்கப்பட்ட ஸ்கோர் இதுவாகும், குறைவான நேரத்தில் சேஸிங் செய்யப்பட்டதும் இதுவாகும். அதுமட்டுமின்றி, 152 கால பெக்கன்ஹாம் கிளப் வரலாற்றில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோரும் இதுவேயாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricket team all out for 18 target chased in just 12 minutes numbers from this bizarre match in england

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X