India vs Australia 3rd Test, Ravindra Jadeja, Rohit Sharma Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், 2வது செஷன் முடிவதற்குள் ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் முடிவில் இந்தியா 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக கோலி 22 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் - கில் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அவர்களின் ஆட்டமிழப்பு, அடுத்த வந்த இந்திய டாப் ஆடர் வீரர்களையும் தொற்றிக்கொண்டது. புஜாரா ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஜடேஜா (4)
மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இதனால், 45 ரன்கள் இந்தியா 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன்பிறகு வந்த கோலி - பரத் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், அவர்களும் தங்களின் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து வந்தவர்களும் ஆட்டமிழந்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இந்தியா 109 ரன்கள் அடங்கியது.
எல்.பி.டபிள்யூ ஆன ஜடேஜா… கடுப்பான ரோகித்: மீம்ஸ் போட்டு தள்ளும் நெட்டிசன்கள்
இந்த ஆட்டத்தில் நாதன் லயன் 11வது ஓவரை வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தை ஜடேஜா எதிர்கொண்டார். சுழன்று வந்த பந்து அவரது பேடை பதம் பார்த்தது. இதனால், எல்.பி.டபிள்யூ-வுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்ய கள நடுவர் நிதின் மேனன் அவுட் என விரலை உயர்த்தினார். ஆனால், ஜடேஜா ரீவியூக்கு செல்ல, பந்து முதல் பேட்டிலும், அடுத்ததாக பேடிலும் பட்டது தெரிந்தது. அதன்பிறகு, நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்ய தயரான ஜடேஜா லயன் வீசிய அடுத்த பந்தை பேக்ஃபூட்டி சென்று கவர் ட்ரைவ் அடித்தார். அப்போது 30-யார்ட் வட்டத்திற்குள் இருந்த மேத்யூ குஹ்னிமான் பந்தை லாவகமாக கேட்ச் எடுத்தார். அவுட் ஆகிய ஜடேஜா பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். முன்னதாக, ஜடேஜா எல்.பி.டபிள்யூவில் இருந்து தப்பித்ததை கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட கேப்டன் ரோகித், இப்போது கடுப்பாகினார். அவர் எரிச்சலடைந்து முகம் சுளித்தது கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டு, மீம்ஸ்களை போட்டும் வருகின்றனர் நெட்டிசன்கள்.
— MAHARAJ JI (@MAHARAJ96620593) March 1, 2023
— MAHARAJ JI (@MAHARAJ96620593) March 1, 2023
4 down Jadeja and suddenly Shreyas also out . 5 down. Very poor batting. Kuhneman also makes his mark. 😢😢
— Dr.Sachin Ganorkar (@sachinganorkar) March 1, 2023
Out of 5 wickets that fell, 4 were the mistake of the batsmen, Rohit came out to slog it for a six, Shubman didn't read it, Jadeja went for a shot as well and Shreyas just hit it on stumps. Now everybody instead of blaming batsmen will blame the pitch.😂😂😂#INDvsAUS
— Chinmay Rane (@cvrane) March 1, 2023
This Indore pitch gonna be rated as poor by ICC.
Teams get 200+ runs here in T20s and home team's score is 45 for 5 in Tests.
This match will end within 3 days. More fifers are on for Ashwin, Jadeja.#INDvAUS— Arjun (@iam_arjunk) March 1, 2023
Poor shot selection so far from iyer jadeja Rohit and pujara absolutely nothing shots and pitch isn't that bad either we are letting go advantage of batting first pathetic #IndvsAus
— Karan Sharma (@SkSharmakaran) March 1, 2023
Ashwin, Jadeja and Axar after seeing the Indore pitch pic.twitter.com/DRAevtFuMX
— Ankit Pathak 🇮🇳 (@ankit_acerbic) March 1, 2023
#INDvAUS
Rohit , jadeja, pujara, shreyash
Play bad short
Indian player didn't know how to play spin.
Ridiculous batting by indian player 🤬🤬— soumik~👑 (@AmitMon06100943) March 1, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.