/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-04T164331.031.jpg)
இந்தியா முதல் 5 ஓவர்களுக்குள் வந்த 3 நல்ல கேட்சுகளை கோட்டை விட்டது கடும் அதிருப்தியை கொடுத்தது.
India vs Nepal Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் பல்லகெலெவில் இன்று நடைறும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் நேபாளம் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்நிலையில், பீல்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 கேட்சுகளை கோட்டை விட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் முதல் 5 ஓவர்களுக்குள் வந்த 3 நல்ல கேட்சுகளை கோட்டை விட்டது கடும் அதிருப்தியை கொடுத்தது.
முதல் ஓவரின் கடைசி பந்தை நேபாள அணியின் தொடக்க வீரர் குஷால் புர்டெல் முதல் ஸ்லிப் பக்கம் விரட்ட, அதை ஷ்ரேயாஸ் ஐயர் பிடிக்காமல் கோட்டை விட்டார். சிராஜ் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ஆசிப் ஷேக் கொடுத்த கேட்சை கோலி கோட்டை விட்டார். இதேபோல் 4.2வது ஓவரில் குஷால் புர்டெல் க்ளவுசில் பந்து பட அதை இஷான் கிஷன் விட்டார். இப்படியாக இந்தியாவின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து 3 கேட்சுகளை கோட்டை விட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
3 Dropped Catches 😱 #IndvsNeppic.twitter.com/LQOnqv3yEN
— Susanta Sahoo (@ugosus) September 4, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.