ஜாலி ரோவர்ஸ் சிசி அணியின் பாபா அபராஜித் தான் ஆட்டமிழந்தது குறித்து கள நடுவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவதத்தில் ஈடுபட்டார்.
Baba Aparajith altercation with umpires Tamil News: 'தி ராஜா ஆஃப் பாளையம்பட்டி' ஷீல்டு தொடருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் (டி.என்.சி.ஏ) முதல் டிவிஷன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜாலி ரோவர்ஸ் சிசி - யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை ஜாலி ரோவர்ஸ் சிசி அணி துரத்தியது. அந்த அணி 27.2 ஓவருக்கு 74 ரன்கள் எடுத்தபோது சாய்சு தர்சன் 25 ரன்னுடனும், பாபா அபராஜித் 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
Advertisment
இந்த ஜோடியில் பாபா அபராஜித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், அவர் ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாபா அபராஜித் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்பட்ட பின் அவர் கள நடுவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். இது ஆடுகளத்தில் வீரர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் நடுவர்களுடன் தொடர் வாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
யங் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் வீசிய 18வது ஓவரை எதிர்கொண்ட பாபா அபராஜித், அந்த பந்தை தனது லெக்சைடில் விரட்ட முயன்றார். அப்போது பார்வட் ஷார்ட் லெக்கில் இருந்த ஜி.எஸ்.ராஜுடைவ் அடித்து பந்தை லாவகமாக கேட்ச் செய்தார். அதற்கு நடுவருக்கு அவுட் என அறிவித்தார். ஆனால், அபராஜித் இது அவுட் இல்லை. பந்து பேட்டில் படவே இல்லை என்பது போல சைகை காட்டினார்.
Advertisment
Advertisements
எனினும், நடுவர் தான் உயர்த்திய கையை கீழே இறக்கவே இல்லை. அபராஜித் தான் அவுட் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் எதிரணி வீரர்களுடனும் வாதம் செய்தார். இதனால், ஆட்டம் 5 நிமிடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்த பரபரப்பும் எகிறிக் கொண்டே இருந்தது. ஒருவழியாக, நடுவர்களிடன் முடிவை ஏற்றுக்கொண்ட அபராஜித் பெவிலியனுக்கு செல்லும் வரை அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அபராஜித்தின் இந்த செயலுக்காக பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், ரீப்ளேயில் அபராஜித்தின் கேட்ச் தரையில் பந்து பட்ட பிறகே பிடிக்கப்பட்டது தெரிந்தது. இப்போட்டியில் அபராஜித் விளையாடிய ஜாலி ரோவர்ஸ் சி.சி. அணியே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.