cricket video news in tamil: உலகில் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உருவெடுத்து வருகிறது. இந்த விளையாட்டை வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரும் விளையாடி வருகின்றனர். இளம் வீரர்களை உருவாக்கும் விதத்தில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர் போட்டிகளும், விளையாட்டை நேசிக்கும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் என பல்வேறு கிரிக்கெட் தொடர் போட்டிகள் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கிரிக்கெட் தொடர் போட்டிகள் மைதானங்களில் நடத்தப்படுகையில், சுவாரஷ்ய சம்பவங்களும், பரபரப்பும், சிரிப்பு அலைகளும், கூச்சல்களும், முழக்கங்களும் இருக்கும். அந்த வகையில், இங்கிலாந்தில் ஒரு கிராமத்து கிரிக்கெட் போட்டியின் போது, நடந்த சம்பவம் அங்கிருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் சிரிப்பலையை உருவாகியுள்ளது.
தனது அணியின் வீரர் ஆட்டமிழந்தை அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன் நேராக ஆடுகளத்திற்குள் நுழைகிறார். பிறகு ஸ்டம்புக்கு முன்புறம் நின்று கொண்டு நடுவரிடம் நடு-ஸ்டம்ப் என்று கேட்கிறார். ஆனால் நடுவர் யாரிடமோ போன் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே, அந்த பேட்ஸ்மேனே நடு ஸ்டம்ப் எடுக்கிறார்.
அந்த நேரத்தில் எதிரணியின் விக்கெட் கீப்பர் வீரர் பேட்மேனிடம் ‘நீங்கள் கிரிக்கெட் பேடுஅணியவில்லை’ என்று கூறுகிறார். அதற்கு அவர் இது போன்ற பேச்செல்லாம் என்னிடம் எடுபடாது’ என்பது போல் சட்டென பேசிவிடுகிறார். பின்னர், பேட்டை கொண்டு கீழே குனிந்து ஆட தயாராகும் போது அவர் தான் பேடு அணியவில்லை என்பதை உணர்கிறார். பிறகு அதை அணிவதற்காக ஆடுகளத்தில் இருந்து டக் -அவுட்டிற்கு ஓட்டம் பிடிக்கிறார்.

அப்படி ஓட்டம் பிடிக்கும் அந்த வீரரின் பெயர் மார்ட்டின் ஹியூஸ். இவர் சவுத்ஹெண்ட் சிவிக் கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வருகிறார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவிட்ட நிலையில், தட்ஸ் சோ வில்லேஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நமது முகத்திலும் சிரிப்பை கொண்டு வரும் இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
— That’s so Village (@ThatsSoVillage) July 20, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil