Advertisment

பாகிஸ்தான் மீது இவ்ளோ கோபமா? இலங்கை வெற்றியை கொண்டாடி தீர்த்த ஆப்கன் ரசிகர்கள்!

Afghanistan fans celebrate Sri Lanka’s title win, take to streets after Pakistan loss in Asia Cup 2022 Tamil News: ஆசியக் கோப்பை தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி நடனமாடி கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Cricket video news in tamil: Afghan fans celebrate sl title win over pak in asia cup 2022

Sri Lanka vs Pakistan, Asia Cup 2022 Final Tamil News

Asia Cup 2022 - Sri Lanka vs Pakistan Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. துபாயில் நேற்று இரவு விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

Advertisment

அந்த அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறிய நிலையில், தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பனுகா ராஜபக்சா, ஹசரங்கா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடியில் ஹசரங்கா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து அசத்திய பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மேலும். இலங்கை அணி விரித்த சுழல் வலையில் சிக்கிய பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் விளாசிய அரை சதம் (55) வீணானது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மிகச்சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை முத்தமிட்டது.

இலங்கை வெற்றியை கொண்டாடி தீர்த்த ஆப்கன் ரசிகர்கள்…

இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரை வென்ற இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் அப்துல்ஹக் ஒமேரி பகிர்ந்த வீடியோவில், இலங்கையின் வெற்றிக்குப் பின்னர் சில ரசிகர்கள் ஆரவாரத்துடனுடன், சிலர் மகிழ்ச்சியுடனும், நடனமாடியபடி, வீதியில் இறங்கி இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடி தீர்த்தனர். மேலும், சமூக வலைதள பக்கங்களிலும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் பீல்டிங் செய்யும் போது, ​​அந்நாட்டு வீரர்களின் செயல்திறனைப் பார்த்து கேலி செய்யவும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கு வாழ்த்துகள் இலங்கைக்கு நன்றி.. இலங்கை வெற்றியை ஆப்கானிஸ்தான் உற்சாகப்படுத்துகிறது மற்றும் கொண்டாடுகிறது,” என்று ஒரு ஆப்கான் ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

ஐ.சி.சி. தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மற்றோரு ரசிகர், நடப்பு ஆசிய தொடரில் நடந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் மண்ணைக் கவ்வியது. அதேவேளையில், ஆப்கான் அணி ஒருமுறை இலங்கை அணியை வீழ்த்தியது என்று கேலி செய்து பதிவிட்டுள்ளார். "நாங்கள் ஆசிய கோப்பை சாம்பியன்களை வென்றோம். ஆனால் நீங்கள் 2 முறை தோற்றீர்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதே பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ள ஒரு ரசிகர், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தெருக்களில் நடனமாடி இலங்கையின் வெற்றியைக் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். “இலங்கையின் வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்கள் இப்படித்தான் கொண்டாடுகிறார்கள். #AsiaCup2022,” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

மற்றோரு ஆப்கான் ரசிகர், பாகிஸ்தானின் பீல்டிங்கை கேலி செய்த ஒரு புகைப்படத்தை, பாகிஸ்தான் ஜாம்பாவான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்ட வீடியோவிற்கு கீழ் பகிர்ந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு ரசிகர், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, "பாகிஸ்தான் வீழ்ச்சி என் மகிழ்ச்சி" என்று ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Sports Cricket Pakistan Asia Srilanka Afghanistan Viral Video Viral News Pakistan Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment