Watch viral video: R Ashwin Giving Batting Tips Dinesh Karthik Tamil News
R Ashwin - Dinesh Karthik Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
Advertisment
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம்
இந்த உலககோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Advertisment
Advertisements
தீவிர பயிற்சியில் இந்திய அணி
இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. தற்போது உலகக் கோப்பை தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி வருகிறது.
டி.கே-வுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த அஸ்வின்
இந்த நிலையில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அஸ்வின் பேட்டிங் டிப்ஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பறந்து சென்றது. அப்போது அதில் பயணித்த இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் எழுந்து நின்ற வண்ணம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு, அஸ்வின் தினேஷ் கார்த்திக்கிற்கு சில பேட்டிங் டிப்ஸ்களை வழங்கினார்.
அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தது வீடியோவாக பதிவிட்ட நிலையில், அந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.