சென்னையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் அஸ்வின்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
Ashwin plays Street Cricket In Chennai Video Goes Viral Tamil News: சென்னையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் அஸ்வினின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
R Ashwin Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபர் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
அஸ்வினின் இந்திய அணி தேர்வு எப்படி நடந்தது?
நடப்பு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அஸ்வின் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையானடினார். தவிர, இந்தாண்டில் அவர் ஐந்து டி20 போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாடியுள்ளார். இதனால், அவர் டி-20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பதில் சந்தேகம் இருந்தது. எனினும், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேல் அணியில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தும் அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளருக்கான தேவை ஏற்பட்டது.
தகவல்களின் படி, தேர்வாளர்கள் அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் தலையீட்டால் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவரின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, அவர் ஆடும் லெவனிலும் இடம் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கக்கலம்.
முன்னதாக, மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமாட இருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் அஸ்வினின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஸ்வின் தனது சுழல் பந்துவீச்சில் பந்துகளை வீசுகிறார். அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் ரன் எடுக்க முடியாமல் திணறுகிறார்.
அஸ்வின் 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்டுகளையும், 131 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் 154 ஐபிஎல் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.