scorecardresearch

தரமான யார்க்கரை இறக்கி விட்ட பும்ரா… கதிகலங்கிப் போன ஆஸி,. வீரர்!

Bumrah left Steve Smith on the ground with a brilliant yorker Tamil News: காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, நேற்றைய ஆட்டத்தில் தனது அசாத்திய யார்க்கர் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கதிகலங்க செய்தார்.

Cricket video news in tamil: Bumrah leaves Smith on ground with unplayable yorker during ind vs asu 2nd T20I
Steve Smith – Jasprit Bumrah – Australia tour of India, 2022

India vs Australia 2nd T20I – Jasprit Bumrah – Steve Smith Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னையில் வகிக்கிறது

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி-20 மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று இரவு நடைபெற்றது. கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்தீவ் வேட் 43 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 91 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணி 7.2 ஓவரில் இலக்கை எட்டிபிடித்தது. 4 பவுண்டரி 4 சிக்ஸர் என மிரட்டல் அடி அடித்த கேப்டன் ரோகித் 46 ரன்கள் எடுத்தார். 2 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்த சிறப்பான வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

தரமான யார்க்கரை இறக்கி விட்ட பும்ரா… கதிகலங்கிப் போன ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக முந்தைய முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர், நேற்றைய ஆட்டத்தில் களமாடி இருந்தார். இந்த ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசியிருந்த அவர் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

பும்ரா ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை தனது அசாத்திய யார்க்கர் மூலம் தொந்தரவு செய்து வந்தார். அதில் அவர் வீசிய ஒரு பந்து ஸ்மித்தின் வலது காலில் நச் என்று இறங்கியது. பந்து காலின் அடி பாதத்தில் பட்டதும் ஸ்மித் கதிகலங்கி கீழே முகம் குப்புற விழுந்தார். அந்த பந்தில் ஸ்மித் ஆட்டமிழக்கவில்லை என்றாலும், அது அவரை ஆட்டம் காண செய்திருந்தது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket video news in tamil bumrah leaves smith on ground with unplayable yorker during ind vs asu 2nd t20i