IND vs SA: தொடரை கைப்பற்றிய இந்தியா… ட்ரெஸ்ஸிங் ரூமில் குத்தாட்டம் போட்ட தவான் & கோ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், அதை இந்திய வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், அதை இந்திய வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stand-in skipper Shikhar Dhawan shared a video of Team India’s wild celebrations after the Men In Blue defeated South Africa in the 3rd ODI Tamil News
Shikhar Dhawan - South Africa tour of India, 2022 Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 1 - 2 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
Advertisment
இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காத தென் ஆப்ரிக்கா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தனர். மேலும் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 99 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 27.1 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டி எடுத்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 100 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19.1-வது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தது, இந்திய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதை ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அவர்கள் தொடர்ந்து இருந்தார்கள். அப்போது, இந்தியா வீரர்கள் பிரபலமான பஞ்சாபி பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்து உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த வீடியோவை தவான் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவிர, அந்த பிரபலமான பஞ்சாபி பாடலுக்கு இந்திய வீரர்கள் நடனமாட தவான் நடனம் சொல்லிக்கொடுத்த வீடியோ ஒன்றும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்தியா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்தியாவின் வெற்றி, இந்த வருடத்தில்அணி பெறும் 38-வது வெற்றியாகும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து ஃபார்மெட்களிலும் சேர்த்து இந்திய அணி இந்த வருடத்தில் தற்போது வரை 38 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்று இருந்த ஆஸ்திரேலிய அணி அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதுவே ஒரு வருடத்தில் ஒரு சர்வதேச அணி பெற்ற அதிக வெற்றியாக இருந்தது. தற்போது இந்திய அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவை. இதனால் விரைவில் இந்திய அணி அந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.