Hardik Pandya, Virat Kohli, IND-AUS 1st ODI Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 189 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் டாப் ஆடர் வீரர்களான இஷான் கிஷன் (3 ரன்), சுப்மன் கில் (20 ரன்), விராட் கோலி (4), சூரியகுமார் (0) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடியில், 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட பாண்ட்யா 25 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு ராகுல் - ஜடேஜாவுடன் ஜோடி இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது.
#TeamIndia go 1⃣-0⃣ up in the series! 👏 👏
An unbeaten 1⃣0⃣8⃣-run partnership between @klrahul & @imjadeja as India sealed a 5⃣-wicket win over Australia in the first #INDvAUS ODI 👍 👍
Scorecard ▶️ https://t.co/BAvv2E8K6h @mastercardindia pic.twitter.com/hq0WsRbOoC— BCCI (@BCCI) March 17, 2023
இறுதியில், 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய தரப்பில், கடைசி வரையிலும் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் அரைசதம் விளாசி 91 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 75 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 69 பந்துகளில் 5 பவுண்டரிகளை விரட்டி அடித்து 45 ரன்கள் எடுத்தார். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
1⃣ Brilliant catch
2⃣ Wickets
4⃣5⃣* Runs
For his superb all-round performance, @imjadeja bags the Player of the Match award as #TeamIndia beat Australia in the first #INDvAUS ODI 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/BAvv2E8K6h @mastercardindia pic.twitter.com/xaPDmpRX0p— BCCI (@BCCI) March 17, 2023
மைதானத்தில் கோலியை அப்செட் ஆக்கிய பாண்ட்யா: வீடியோ
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது மைதானத்தில் கோலியை அப்செட் ஆக்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். அவர் தனது சொந்த குடும்ப காரணங்களுக்காக விடுப்பில் சென்றுள்ளார். இதனால், பொறுப்பு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். டி-20 போட்டிகளுக்குப் பிறகு பாண்ட்யா முதல் முறையாக நேற்று ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
இந்த ஆட்டத்தின் போது முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் ஏதோ ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கோலி தான் சொல்ல வந்த கருத்தை சொல்லி முடிப்பதற்குள் பாண்ட்யா அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த கோலி அதிர்ச்சியடைந்தார். மேலும் தனது பீல்டிங் இடத்திற்கு செல்லும் முன் குல்தீப்பிடம் ஏதோ கூறிக்கொண்டே சென்றார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கோலி பேசிக்கொண்டு இருக்கும் ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்தை விட்டு வெளியேறிய விதம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
— CricAddaa (@cricadda) March 17, 2023
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் அணியில் இணைந்து பொறுப்பேற்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.