scorecardresearch

யாருப்பா இப்படி தவழ்ந்து வந்து டான்ஸ் ஆடுறது? வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் செம கொண்டாட்டம்

Team India convert dressing room into DANCE FLOOR after ODI series win over Zimbabwe Tamil News: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி இந்திய அணியினர், நேற்று போட்டி முடிந்ததும் வெற்றியயை கொண்டாடும் விதமாக செம குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

Cricket video news in tamil: Ind players dance 'Kala Chashma' dressing room to celebrate win over Zim
Team India players dance on 'Kala Chashma' in dressing room to celebrate win over Zimbabwe Tamil News

Cricket video news in tamil: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணமாக சென்ற கே.எல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. கடந்த 18 ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் மிச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விளாசினார். 82 பந்துகளில் அவர் சதமடித்த நிலையில், 97 பந்துகளில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டு 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இந்திய அணி நிர்ணயித்த 290 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் வீரர் சிக்கந்தர் ராசா தனது ஆறாவது ஒருநாள் சதத்தை அடித்தார். மேலும், அவர் 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்டு 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முந்தைய ஆட்டங்களைப்போல், இந்த ஆட்டத்திலும் ஜிம்பாப்வே வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு செம ஆட்டம் போட்ட இந்திய வீரர்கள்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 3 -0 என்கிற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் அடித்த நிலையில், நேற்ற ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன், அவேஷ் கான் மற்றும் சில வீரர்கள் ஹராரே டிரஸ்ஸிங் அறைக்குள் நடனமாடி தங்கள் மறக்கமுடியாத வெற்றியைக் கொண்டாடினர். அனைவரும் ‘கலா சஷ்மா’ (thequickstyle) என்ற பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் முதலில் தவழ்ந்து வந்து ஆட்டம் போடுகிறார் இஷான் கிஷன். அதன் பிறகு தவானுடன் மீண்டும் இணைந்து ஆடுகிறார். கடைசியில் சுப்மான் கில் தனது பங்கிற்கு ஒரு குத்தாட்டம் போடுகிறார். நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket video news in tamil ind players dance kala chashma dressing room to celebrate win over zim