India vs Australia, 2nd Test, KL Rahul Tamil News: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமாடியது. அந்த அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
Innings Break!
— BCCI (@BCCI) February 17, 2023
Australia are all out for 263 in the first innings.
4️⃣ wickets for @MdShami11 👌🏻
3️⃣ wickets apiece for @ashwinravi99 & @imjadeja 👍🏻
Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8 #TeamIndia | #INDvAUS pic.twitter.com/RZvGJjsMvo
வீடியோ: மிரட்டல் டைவில் கேட்சை பிடித்த ராகுல்… அதிர்ச்சியுடன் வெளியேறி ஆஸி,. வீரர்
இந்த ஆட்டத்தில் ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில், மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும், அரைசதம் விளாசிய அவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்திருந்தார். அப்போது ஆட்டத்தின் 45வது ஓவரை சுழல் வீரர் ரவீந்திர ஜடேஜா வீச வந்தார். அவரின் 5வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார் கவாஜா. எனினும், பந்தை அவரால் சரியாக விரட்ட முடியவில்லை.
பந்து ஸ்கொயர் லெக் திசையில் பறந்து சென்றது. அப்போது அங்கு நின்ற ராகுல் தனது வலதுபுறமாக ஒரு அற்புதமான டைவ் அடித்து லாவகமாக பந்தை கேட்ச் பிடித்தார். இந்தக் கேட்சைப் பார்த்து கவாஜா திகைத்துப் போனார். மேலும், பெவிலியனை நோக்கி நடையைக் கட்டும் முன் திகிலுடன் நிமிர்ந்து பார்த்தார்.
ICYMI – WHAT. A. CATCH 😯😯
— BCCI (@BCCI) February 17, 2023
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUS pic.twitter.com/ODnHQ2BPIK
முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய 31.2 வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அவுட்-சைடு எட்ஜ் அடிக்க, அப்போது 2வது ஸ்லிப்பில் நின்ற பீல்டர் கே.எல்.ராகுல் அசத்தலான கேட்சை எடுத்தார். பந்து ஸ்லிப் கார்டனை நோக்கி வேகமாகப் பயணித்த நிலையில், ராகுலின் அற்புதமான ரிஃப்ளெக்ஸ் ஆக்சன் கேட்ச்சை லாவகமாக பிடிக்க அவருக்கு உதவியது.
This is a brilliant catch by #KLRahul at the slip#INDvAUSpic.twitter.com/YQ5OJM62Ia
— KL Siku Kumar (@KL_Siku_Kumar) February 17, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil