Birmingham 2022 Commonwealth Games Tamil News: 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் நேற்று முன்தினம் 4-வது நாளாக, "லான் பவுல்ஸ்" விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்து வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணியில் லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்று இருந்தனர். இந்த நால்வர் கொண்ட அணி நேற்று நடந்த இறுதி போட்டியில் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது. மேலும், இந்த விளையாட்டில் முன்னணி அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இந்திய அணி, காமன்வெல்த் போட்டியில் இந்த விளையாட்டில் முதல்முறையாக பதக்கத்தை முத்தமிட்டு அசத்தி இருக்கிறது. பதக்கம் வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், விளையாட்டு ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், லான் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய அணி பலம் பொருந்திய தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. பார்ப்போருக்கு புல்லரிப்பை கொண்டுவரும் அந்த வீடியோ தற்போது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Saare Jahaan Se Achcha 🫡🇮🇳
The moment where every Indian's heart was filled with pride and joy 🫶🏽
An emotional feeling to see India get their first Lawn Bowls 🥇 Medal 🥹#BirminghamMeinJitegaHindustanHamara 🫶#SirfSonyPeDikhega #SonySportsNetwork #B2022 #CWG2022 pic.twitter.com/FZGp4VnjBq— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.