/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-05T135657.038.jpg)
Mohammad Kaif
News about Legends League Cricket, Pakistan and Mohammad kaif in tamil: லெஜெண்ட்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு அரங்கேறவுள்ள இறுதிப்போட்டியில், கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் - இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பாக்,.-க்கு எதிரான ஆட்டத்தை நினைவுபடுத்திய முன்னாள் இந்திய வீரர் - வைரல் வீடியோ
இந்த தொடருக்கான மணிப்பால் டைகர்ஸ் அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த முகமது கைஃப் இடம்பிடித்துள்ளார். அவர் இந்தியா கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கிரீஸில் இருந்து இறங்கி வந்து சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். அவரின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஆட்டம் ஒன்றை ரசிர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் சிக்ஸர் விளாச கிரீஸில் இருந்து இறங்கி வந்து, தனது பேட்டிங் பாணியால் சோயிப் அக்தரை எரிச்சலூட்டியதையும், லெஜெண்ட்ஸ் லீக் டி-20 -யில் அவர் இறங்கி வந்து சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஒருநாள் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது. தொடரின் நான்காவது போட்டியில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த கைஃப், இந்திய அணி தொடரை சமன் செய்ய உதவினார். அவரது ஆட்டம் இன்னும் ரசிகர்களின் இதயங்களில் பசுமையாக இருந்து வருகிறது.
Walking is good for health!! #never stop walking. Allahabad wale cricket aise hi khelte hain. #chora ganga kinare wala @llct20 pic.twitter.com/YKeN0Tfeqi
— Mohammad Kaif (@MohammadKaif) October 3, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.