Advertisment

விராட் கோலியை வீழ்த்த தோனி வியூகம்: கசிந்த சி.எஸ்.கே டிரெஸ்ஸிங் ரூம் வீடியோ

சென்னை அணி டிரஸ்ஸிங் ரூமில் கோலி பற்றி தோனி பேசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket video news in tamil: MS Dhoni cites Kohli’s example inside CSK dressing room

Virat Kohli and MS Dhoni. (Source: iplt20.com)

Indian Premier League (IPL) 2023 - Virat Kohli - MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ் தோனி - விராட் கோலி பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருகின்றனர். தோனி 2014ல் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது இடத்தை கோலி நிரப்பினார். பின்னர், 2017 ஆம் ஆண்டில், ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகுவதாக அறிவிக்க, கோலி 3 ஃபார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டார்.

Advertisment

அப்போதிருந்து, விராட் கோலி இந்திய அணியை சிறந்த சாதனைகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஐசிசி நடத்திய பெரிய போட்டிகளில் அவரது தலைமையிலான அணி கோப்பை வெல்லவில்லை என்பது இன்றுவரை கரும்புள்ளியாக இருந்து வருகிறது. இதேபோல், ஐபிஎல் தொடருக்கான பெங்களுரு அணியை வழிநடத்திய அவர் அந்த அணியை கோப்பையை உயர்த்திப் பிடிக்க முடியாத கேப்டன் ஆனார்.

publive-image

இப்படியான பல்வேறு காரணங்கள் காரணமாக அவர் 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, தனது இந்திய அணி கேப்டன் பதவியை உதறினார். ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ கழற்றிவிட, 2022ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். முன்னதாக, 2021 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது தனித்துவமான பேட்டிங் நுட்பம் உலகளவில் வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.

தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ள கோலி சமீப காலமாக சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோலி 419 ரன்களை குவித்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 82 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 135.16 ஆகவும் உள்ளது.

டிரெஸ்ஸிங் ரூம் வீடியோ

இந்நிலையில், தற்போது இந்திய மண்ணில் நடந்து 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தனது முன்னாள் சக வீரரும், நெருங்கிய நண்பருமான விராட் கோலியின் நுட்பத்தை தனது அணியில் உள்ள வீரர்களுக்கு உதாரணம் காட்டி டிப்ஸ் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “விராட் முதல் பந்தை இப்படி ஆடுவதில்லை. அது எப்போதும் இங்கே இருக்கும்,” என்று சென்னை அணியின் டிரஸ்ஸிங் அறையில் ஒருவரிடம் கோலியின் பேட்டிங் ஸ்டைலை தோனி விளக்குவதைக் கேட்கலாம்.

ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் 5ல் வெற்றி, 5ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.209 ஆக உள்ளது. அதேநேரத்தில், தோனி தலைமையிலான சென்னை அணி 13 புள்ளிகளுடனும், +0.409 என்ற நெட் ரன்ரேட்டுடனும் 2வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், பெங்களூருவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Video Chennai Super Kings Virat Kohli Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ms Dhoni Royal Challengers Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment