Asia cup 2022: Rishabh Pant and Dinesh Karthik Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. நேற்று துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித்துக்கு பதிலாக கே.எல்.ராகுல் செயல்பட்டார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சதமடித்த விராட் கோலி 122 ரன்கள் எடுத்தார். அரைசதம் விளாசிய ராகுல் 62 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 213 ரன்கள் கொண்ட ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சட்ரன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
'ஆல்-இன்-ஆல் கன்ட்ரோல் ஐயா தான்' என்ற பண்ட்… டி.கே பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஆப்கான் வீரர்!
இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் வீசினார். ஒரு ஓவரை வீச வந்த அவரின் முதலாவது பந்தில் 2 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அப்போது கீப்பராக இருந்த பண்ட், 'ஆல்-இன்-ஆல் கன்ட்ரோல் ஐயா தான்' என்பது போல் 'டி.கே பாய், எல்லாம் என் கன்ட்ரோல்ல இருக்கு' (டிகே பாய், சப் கன்ட்ரோல் மே ஹை) என்றார். ஆனால், தினேஷ் வீசிய ஓவரை சந்தித்த இப்ராஹிம் சத்ரான், அவரின் அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
பண்ட் தினேஷிடம் 'எல்லாம் என் கன்ட்ரோல்ல இருக்கு' என்று கூறியது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவான நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. சிரிப்பலையை கொண்டு வரும் அந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil