scorecardresearch

IND vs AUS: வெற்றி பவுண்டரி அடித்த பாண்டியா; ரோஹித்- கோலி கொண்டாட்டம் – வீடியோ

India vs Australia, 3rd T20I; Rohit Sharma and Virat Kohli viral video Tamil News: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் – கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Cricket video news in tamil: Rohit - Kohli wild celebration after Pandya hits winning boundary
Both Virat and Rohit were impatiently watching the last over of the game when Hardik Pandya was in action. (Videograbs)

Australia tour of India, 2022 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி -20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் மொஹாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த 2வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 186 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர்குமார், சாஹல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதங்களை விளாசிய இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 69 ரன்களிலும், விராட் கோலி 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா – தினேஷ் கார்த்திக் ஜோடி ஒரு பந்தை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தனர்.

இந்த ஜோடியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. மேலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் டி20 தொடரில் 2- 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

ரோஹித் – கோலி கொண்டாட்டம் – வைரல் வீடியோ

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டேனியல் சாம்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தை ஆப்-சைடில் விளாச முயன்ற அவர் பிஞ்ச் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் கண்ட தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார். 4 வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத பாண்டியா 5வது பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தான் ஆட்டமிழந்த பிறகு வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற கோலி, அங்கு பேட்டை வைத்துவிட்டு, அங்கிருந்த படிக்கட்டில் ரோகித் மற்றும் ஹர்ஷல் படேலுடன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மைதானத்தில் ஒருவித பரபரப்பு நிலவியது. ஆனால், அதைப்பற்றி துளியும் கவலை கொள்ளாத ஹர்திக் பாண்ட்யா சாம்ஸின் 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

அப்போது சட்டென்று எழுந்த கோலி ரோஹித்தை கட்டியணைத்து அவரது முதுகில் தனது கைகளால் பாசமாக தட்டி வெற்றியைக் கொண்டாடினார். ரோஹித்தும் கோலியின் இடிப்பை பற்றியவாறு பாசமாக கட்டியணைத்து வெற்றியைக் கொண்டாடி நெகிழ்ந்தார். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

“மிகப்பெரிய பாசிட்டிவ் என்னவென்றால் எல்லா வீரர்களும் வெற்றிக்கு பங்காற்றியது. டி20 களில் பிழையின் விளிம்பு சிறியது. நாங்கள் எங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தினோம், நாங்கள் தைரியமாக இருந்தோம். சில சமயங்களில் அது வெளியே தெரியாது. இன்னும் கவனம் செலுத்த வேண்டிய சில பகுதிகள் உள்ளன. சிறிய இடைவேளைக்குப் பிறகு, கடினமான அணிக்கு எதிராக திரும்பி வருவது எளிதல்ல” என்று போட்டிக்குப் பிறகான பேட்டியில் கேப்டன் ரோஹித் கூறியிருந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டி-20 போட்டி வருகிற 28 ஆம் தேதி கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket video news in tamil rohit kohli wild celebration after pandya hits winning boundary

Best of Express