IND vs PAK Asia cup 2022 Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்று ஆட்டம் நேற்று துபாயில் நடந்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக தெரிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த விராட் கோலி 60 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, ஒரு பந்தை மீதம் வைத்து 19.5 வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 71 ரன்கள் சேர்த்தார். ஆட்டநாயகன் விருதை முகமது நவாஸ் தட்டிச்சென்றார்.
சூப்பர் 4 சுற்றில் முதல் தோல்வி கண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நாளை இரவு 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இதன்பிறகு, வருகிற 8 ஆம் தேதி நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
சொற்ப ரன்னில் அவுட் ஆகி வந்த ரிஷப் பண்டிற்கு கேப்டன் ரோகித் வைத்த கச்சேரி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் மற்றும் ராகுல் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களமாடிய பண்ட் 2 பவுண்டரிகளை மட்டும் விரட்டி 14 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் வீசிய 13.5-வது ஓவரில் பண்ட் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று, ஆசிப் அலி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்த தருணத்தில் இந்திய அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் இருந்த மூத்த வீரர் கோலியுடன் ஜோடி சேர்ந்திருந்த பண்ட், தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்த திடீர் ஆட்டமிழப்பு அணியில் இருந்த வீரர்களை மட்டுமல்லாது, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏமாற்றைத்தைக் கொடுத்தது.
இப்படி ஏமாற்றம் அளித்த பண்ட் டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பியவுடன், கேப்டன் ரோகித் சர்மா, அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பண்டிடம் அவரது மோசமான ஷாட் தேர்வுக்கான காரணத்தைக் கேட்கிறார் கேப்டன் ரோகித். அதன்பிறகு, அங்கு இருவருக்கும் இடையே உள்ள ஒருவரிடமும், தனது கேப்டனிடமும், தான் ஏன் அந்த ஷாட்டை விளையாடினேன் என்பது குறித்து வாதிடுவதையும் காணலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் ஆறு வீரர்களில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக, அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இருந்து கழற்றி விடப்பட்டு, பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் இப்படி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியது அணி நிர்வாகத்திற்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
Rishabh Pant की क्लास लगाते कप्तान Rohit Sharma. ऐसा लग रहा है #RishabhPant से #RohitSharma कह रहे हों कि क्या जरूरत थी भी तुझे ऐसे आड़ा-तिरछा बल्ला घुमाने की. 😄 #AsiaCupT20 #AsiaCup2022 #IndianCricketTeam #IndiaVsPak #IndiaVsPakistan #AsiaCup #India #PakistanVsIndia pic.twitter.com/Pp0Vc4Nw3O
— Tarique Anwer (@tariqueSH) September 4, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil