ஒரு ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்ட சி.எஸ்.கே சிங்கம்… புதிய சாதனை படைத்து அசத்தல்!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் உத்திர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
Gaikwad hit seven sixes in the 2nd quarter final of the Vijay Hazare trophy.(Twitter)
Vijay Hazare Trophy quarterfinals - Ruturaj Gaikwad Tamil News: 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2வது காலிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா - உத்திர பிரதேசம் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
Advertisment
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 10 பவுண்டரிகள் 16 சிக்ஸர்கள் என்று 220 ரன்கள் குவித்தார். தற்போது 331 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை உத்தரப்பிரதேசம் அணி துரத்தி வருகிறது.
புதிய சாதனை படைத்து அசத்திய சி.எஸ்.கே சிங்கம் ருத்து
இந்த ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் 49-வது ஓவரை வீச, அதை எதிகொண்டார் ருதுராஜ். அவர் அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிவா சிங் 5வது பந்தை நோ பால் வீசவே ப்ரீ -ஹிட் கொடுக்கப்பட்டது. அந்த பந்தையும், தொடர்ந்து வீசப்பட்ட அடுத்த 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார் ருத்து. இப்படியாக, ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை படைத்தார். பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.