Road Safety World Series T20 2022: India Legends vs England Legends - Sachin Tendulkar Tamil News: சாலை பாதுகாப்பு உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி முதல் நடந்து வரும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்க தேசம், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகளின் முன்னாள் வீரர்கள் மற்றும் அந்த அணிகளின் ஜாம்பவான் வீரர்கள் களமிறங்கிய விளையாடி வருகின்றனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஜாம்பவன் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் மாழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த முதலில் பேட்டிங் செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சச்சின் 40 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக எஸ் பாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட சச்சின்…
இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 20 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 40 ரன்கள் எடுத்தார். அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியது. மேலும், அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
49 வயதான சச்சின் கிறிஸ் ட்ரெம்லெட் ஓவரில் 6,6 மற்றும் 4 ரன்களை அடித்து நொறுக்கினார். அதில் அவர் அடித்து விரட்டிய ஒரு சிக்ஸர் கிரீஸிலிருந்து வெளியே இறங்கி வந்து பறக்க விட்டார். அது இமாலய தூரத்திற்கு சென்று பவுண்டரி கோட்டிற்கு மேல் பறந்து கீழே இறங்கியது.
சச்சின் அடித்த அந்த இமாலய சிக்ஸர் வீடியோவாக பதிவிடப்பட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கிரிக்கெட் ரசிகர்களும், இணைய வாசிகளும் தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு வரும் நிலையில், ஒரு இணைய வாசி 'டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுங்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு இணையவாசி "நாம் 1998-களில் இருக்கிறோமோ?" என்று ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்னும் ஒரு இணையவாசி "அரசர்கள் தற்காலிகமானவர்கள், கடவுள் நிரந்தரமானவர்!" என்று கூறி நெகிழ்ந்துள்ளார்
ஒரு ரசிகை, '49 வயதான சச்சின் டெண்டுல்கர் மீண்டும் "வயது என்பது வெறும் எண்கள் தான்" என்பதை நிரூபித்துள்ளார்' என்று பதிவிட்டுள்ளார்.
Vintage Sachin Tendulkar pic.twitter.com/qvogWLkVqC
— Sachin Tendulkar🇮🇳FC (@CrickeTendulkar) September 22, 2022
𝗦𝗵𝗮𝗿𝗷𝗮𝗵 𝟮.𝟬 😍🙌🔟🏏 whattttt a playerrr 💙@sachin_rt turning back the clock 🕰️🔄#RoadSafetyWorldSeries #sachintendulkar #sharjah #GOAT #God pic.twitter.com/DflUaugI4N
— Ashish Verma (@ashu112) September 22, 2022
Are we in 1998???? @RSWorldSeries | @sachin_rt | @100MasterBlastr #SachinTendulkar pic.twitter.com/5y3X2HsORH
— Pratik Deshmukh (@one_family__) September 22, 2022
KINGS Are Temporary, GOD Is Permanent! ♥️#SachinTendulkar #GodOfCricket #RoadSafetyWorldSeries pic.twitter.com/hkojuflt7A
— 𝐕𝐈𝐒𝐇𝐀𝐋 🇮🇳 (@Vishal_SRT10) September 22, 2022
A 49 years old Sachin Tendulkar again Proved "Age is just a number" 🥺❤
Sir why you retired we'll missed you and your those Eye 👀 Catching shots❣#SachinTendulkar . #LegendsLeagueCricket pic.twitter.com/0liGrmpRQb— 𝓢𝓾𝓫𝓱𝓪𝓼𝓱𝓻𝓮𝓮🍁 (@subhu__RO45) September 22, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.