New Zealand tour of West Indies, 2022 Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டி-20 ஆட்டம் கிங்ஸ்டனில் நடந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 33 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 47 ரன்னும், கான்வே 29 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நீசம் 15 பந்தில் 33 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஓடியன் சுமித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக புரூக்ஸ் 42 ரன்னும், ரொமாரியோ ஷெப்பர்டு 31 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
Mitchell Santner's 3/19 helps New Zealand take a 1-0 lead in the T20I series 👊#WIvNZ | Scorecard: https://t.co/df0FW775r9 pic.twitter.com/EkpDcPsFEV
— ICC (@ICC) August 10, 2022
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி வருகிற 13 ஆம் தேதி நடக்கிறது.
"கேட்ச் ஆப் தி சீசன்" பிடித்து மிரட்டிய ஷிம்ரோன் ஹெட்மியர்
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார் மார்ட்டின் கப்டில். அவருடன் டெவோன் கான்வே ஜோடி சேர்ந்தார். 16 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தல் தொடக்கம் கொடுத்த கப்டில், ஒடியன் ஸ்மித் வீசிய 7.3வது ஓவரில் மீண்டும் சிக்ஸர் பறக்க விட முயன்றார். அப்போது பவுண்டரி கோட்டிற்கு அருகே இருந்த ஷிம்ரோன் ஹெட்மியர் பந்து தன் பக்கம் பறந்து வருவதை கணித்தார்.
ஆனால், பந்து அவர் இருந்து இடத்திற்கு சற்று தூரத்தில் பறந்து சென்றது. இதைக் கவனித்த ஹெட்மியர், தான் நின்ற இடத்தில் இருந்து ஒரு ஜம் போட்டு, தனது இடது கையால் பந்தை லாவகமாக பிடித்து அசத்தினார். பந்தை பிடித்த பிறகு அவர் தான் பவுண்டரி கோட்டை மிதித்து விட்டோமா என்று பார்த்து, இல்லை என்று தெரிந்தவுடன் விக்கெட் வீழ்த்தப்பட்டதை அணியினருடன் கொண்டாடினார்.
இடதுகை பேட்ஸ்மேனான ஷிம்ரோன் ஹெட்மியர் மிகச்சிறப்பான கேட்ச் பிடித்து அசத்தியது அனைவராலும் கொண்டாடப்பட்டது. அவர் பிடித்த அந்த அற்புத கேட்ச், 'கேட்ச் ஆப் தி சீசன்' என்று வர்ணிக்கப்பட்டது. மேலும், அவர் கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.