Cricket video news in tamil: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20-கள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்றுடன் முடிவடைந்த 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், தொடரைக் கைப்பற்ற போகும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஆட்டடம் நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, அரைசதம் விளாசிய ஹென்ரிக்ஸ் 70 ரன்களும், மார்க்ரம் 51 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 192 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும், ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது. இதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷம்சி 5 விக்கெட்களும், மகராஜ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த மிரட்டலான வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக ஷம்சியும், தொடர் நாயகனாக ஹென்ரிக்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.
Series win 🇿🇦🏆#ENGvSA #BePartOfIt pic.twitter.com/m3AW9iAC6h
— Cricket South Africa (@OfficialCSA) July 31, 2022
A deserved #ENGvSA T20I Player of the Series award for the consistent Reeza Hendricks 💯#BePartOfIt pic.twitter.com/JJIG2tLRnn
— Cricket South Africa (@OfficialCSA) August 1, 2022
Introducing the #Proteas all-time leading T20I wicket-taker - @shamsi90 👑#BePartOfIt pic.twitter.com/pLWaAhbI3e
— Cricket South Africa (@OfficialCSA) July 31, 2022
ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்த தென் ஆப்பிரிக்க வீரர்…
இந்த ஆட்டத்தில், 192 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி சார்பில் களமாடி விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி, ஐடன் மார்க்ரம் வீசிய 9.6 வது ஓவரில், அவரது ஆப்-சைடில் தூக்கி அடிக்க முயற்சித்தார். அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பந்தை நடுவானில் பிடிக்க விரைவாக தரையில் இருந்து குதித்தார். பந்தும் லாவகமாக அவரது கையில் சிக்கிக்கொண்டது. இதனால், மொயீன் அலி 3 ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது ஒரு கையால் டைவிங் கேட்சை எடுத்தது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கேட்சை தாவிப்பிடித்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், 'கிரிக்கெட்டில் இது மிகச்சிறந்த கேட்ச்' என்று வர்ணித்து வருகின்றனர்.
One of the greatest catches you will ever see - 21 year old Tristan Stubbs #Cricket #ENGvSA pic.twitter.com/6rhLS0zNjJ
— Saj Sadiq (@SajSadiqCricket) July 31, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.