வைட் கொடுத்த அம்பயர்… கீப்பர் வசம் கேட்ச் கொடுத்த பேட்ஸ்மேன்… வைரல் வீடியோ!

Umpire Gives Wide, But Batter Still Manages To Get Caught Out In Village Cricket video goes viral Tamil News: சமீபத்தில், ஒரு கிராமத்து கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் ஒருவர் வினோதமான முடிவை வழங்கியது நிகழ்வு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

Umpire Gives Wide, But Batter Still Manages To Get Caught Out In Village Cricket video goes viral Tamil News: சமீபத்தில், ஒரு கிராமத்து கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் ஒருவர் வினோதமான முடிவை வழங்கியது நிகழ்வு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

author-image
WebDesk
New Update
Cricket video news in tamil; Umpire Gives Wide, But Batter Caught Out

The video was shared by England's Barmy Army on their official Twitter handle Tamil News

Cricket video news in tamil: கிரிக்கெட்டில் "நடுவர்" பணி என்பது சவால் நிறைந்த ஒன்றாகும். மைதானத்தில் ஆட்டம் நடத்தப்படுவது முதல் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வது வரை அவர்களின் முடிவு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த காலங்களில் உலகின் சிறந்த சில நடுவர்களை நாம் பார்த்திருப்போம். இதேபோல், சில நேரங்களில், அவர்கள் வழங்கிய தவறுதலான முடிவுகளுக்காக வறுத்தெடுக்கப்படுவதையும் நாம் கேட்டிருப்போம்.

Advertisment

ஆனால், சமீபத்தில் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலான வீடியோவில், ஒரு கிராமத்து கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் ஒரு வினோதமான முடிவை வழங்குகிறார். அது அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்களையும், வீடியோவைப் பார்த்தோருக்கும் சிரிப்பை கொண்டுவந்துள்ளது.

வைரலான அந்த வீடியோவில், பந்து வீச்சு முடிவதற்கு முன்பே நடுவர் வைட் பால் என்று முடிவு கொடுக்கிறார். பந்து வீச்சாளர் ஒரு லூப்பிங் டெலிவரியை வீசினார். அது லெக் சைடில் கீழே பிட்ச் ஆகி, பேட்ஸ்மேன் அதிலிருந்து அதிகபட்ச ரன்களைப் பெற முயல்கிறார். இருப்பினும், அவர் பந்தை இணைக்கத் தவறி, அதை ஸ்கஃப் செய்து முடித்தார். அப்போது, அவருக்கு பின்புறம் இருந்த விக்கெட் கீப்பர் ஒரு எளிதான கேட்சை எடுக்கிறார்.

"Umpire already signalling a wide…OUT caught," என்று கேப்ஷன் இடப்பட்டுள்ள இந்த வீடியோவை இங்கிலாந்தின் பார்மி ஆர்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Video Cricket Sports Social Media Viral Viral Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: