Advertisment

6 ஆண்டுக்குப் பிறகு பவுலிங் போட்ட கோலி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Asia Cup 2022: Virat Kohli, bowling in T20I cricket, after a gap of nearly six years was probably the highlight of the Hong Kong’s innings against India Tamil News: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி பந்துவீசியதன் மூலம், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட 6 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket video news in tamil: Virat Kohli bowling after 6 years; video goes viral internet

Virat Kohli bowled for India vs Hong Kong in Asia Cup 2022. (Screengrab)

Cricket video news in tamil: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு துபாயில் 7:30 மணிக்கு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீசுவதாக செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதன்பிறகு களத்தில் இருந்த விராட் கோலியுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். ரன்குவிப்பில் அதிரடி காட்டி வந்த இந்த ஜோடியில் விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 22 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டினார். அதோடு, ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார் சூர்யகுமார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 44 பந்துகள் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டிய கோலி 59 ரன்களும், 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளை சிதறவிட்ட சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து 192 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய ஹாங்காங் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷ்கத் கான் மற்றும் யஷிம் முர்டசா களமிறங்கினர். யஷிம் முர்டசா 9 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் அவுட் ஆனார். நிஷ்கத் கான் 10 ரன்களில் ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களமிறங்கிய ஹயத் மற்றும் கின்சித் ஷா இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இதில், ஹயத் 35 பந்துகளில் 41 ரன் அடித்து ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். அய்சஸ் கான் 14 ரன்களில் போல்ட் அவுட் ஆனார்.

சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய கின்சித் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அலி மற்றும் மெக்கன்சி அணியை வெற்றி பெற செய்ய கடினமாக போராடினர். எனினும், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காத ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. மேலும், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் , ஜடேஜா, அர்ஷ்தீப், அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

6 ஆண்டுக்குப்பிறகு பவுலிங் போட்ட கோலி…

இந்நிலையில், நேற்று ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீசி அசத்தினார். அவர் இந்த ஆட்டத்தில் 17வது ஓவரை வீசியதன் மூலம், சர்வதேச டி-20கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார். அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் பந்துவீசினார். அந்த சந்தர்ப்பத்தில், ரவிச்சந்திரன் அஷ்வின் இன்னும் தனது ஓவர்களின் ஒதுக்கீட்டை முடிக்கவில்லை என்ற போதிலும், கடைசி ஓவரில் இந்தியா 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தபோதும், ​​எம்எஸ் தோனி கோலிக்கு பந்து வீச அழைப்பு விடுத்தார்.

நேற்றை ஆட்டத்தில் கோலி வீசிய ஒரு ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இதுவரை 101 டி-20 போட்டிகளில், விளையாடியுள்ள கோலி 49.5 சராசரியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் அவரது 8.1 எக்கனாமி வீதத்தைக் கொண்டுள்ளார்.

“அணியில் யாரும் எனது பந்துவீச்சை நம்பவில்லை ஆனால் நான் நம்புகிறேன். அதன்பிறகு எனக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டது, பிறகு (சர்வதேச போட்டியில்) பந்துவீசவில்லை” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பேட்டியில் கோலி கூறியிருந்தார்.

கோலி நேற்றை ஆட்டத்தில் பந்துவீசிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு வரும் நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வழங்கிய சிறப்பு பரிசு:

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, அந்த அணியினர் அனைவரும் சேர்ந்து கையெழுத்திட்ட டி-ஷர்ட்டை சிறப்பு பரிசாக வழங்கிய கவுரவித்துள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Viral Social Media Viral Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Viral Video Viral News Hong Kong
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment