IND vs AUS 4th Test: மோடியுடன் கைகுலுக்கிய கோலி… விண்ணை முட்டிய ரசிகர்களின் ஆரவாரம் - வீடியோ!
4-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், இந்திய பிரதமர் மோடி முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் கைகுலுக்கிய நிலையில், அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அகமதாபாத் மைதானமே அதிர்ந்தது.
Watch video: Rohit Sharma introduces PM Modi to India cricketers, Virat Kohli meet-up draws huge reaction from crowd Tamil News
India vs Australia, 4th Test, PM Modi - Kohli meet-up Tamil News: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
Advertisment
அகமதாபாத் மைதானத்தில் 2 நாட்டு பிரதமர்கள்
முன்னதாக, இந்த டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் வந்தனர். இரு நாட்டு பிரதமர்களின் வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆட்டம் திட்டமிடப்படி தொடங்குவதற்கு முன்பே மைத்தானத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
Advertisment
Advertisement
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதற்கு முன், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது தொப்பியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதேபோல், ஆஸ்திரேலியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது தொப்பியை பிரதமர் ஆண்டனி அல்பனீஸிடம் இருந்து பெற்றார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆஸ்திரேலிய பிரதமருக்கும், செயலாளர் ஜெய் ஷா பிரதமர் மோடிக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கினர். இதன்பிறகு, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 75 ஆண்டுகால நட்புறவைக் குறிக்கும் வகையில் மைதானத்தை இருநாட்டு பிரதமர்களும் சுற்றி வந்து மரியாதை செலுத்தினர்.
விண்ணை முட்டிய ரசிகர்களின் ஆரவாரம்
ஆட்டம் தொடங்கும் முன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அணியில் உள்ள வீரர்களை பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்தினார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருடனும் பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். கேப்டன் ரோகித் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை அறிமுகப்படுத்தினார். கோலி பிரதமர் மோடியுடன் கைகுலுக்கினார். அப்போது மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனது அணி வீரர்களை ஆஸ்திரேலியாவின் பிரதமர் அல்பனீஸுக்கு அறிமுகப்படுத்தினார்.பின்னர் பிரதமர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்திற்காக வீரர்களுடன் இணைந்து கொண்டனர்.