Shaheen Afridi The Hundred Tamil News: இங்கிலாந்தில் 3வது தி ஹன்ட்ரட் (The Hundred - The 100) போட்டிகள் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை - ஆக.1) முதல் தொடங்கியது. 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இந்த தொடரின் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை அனைத்தும் ஆண்கள் - பெண்கள் என இரண்டு பிரிவிலுமே போட்டியிடுகின்றன.
இந்த போட்டியின் விதிமுறையைப் பொறுத்தவரை, ஒரு பவுலர் அதிகபட்சம் 20 பந்துகள் வீசலாம். பவுலர்கள் தொடர்ந்து 5 பந்துகளோ அல்லது 10 பந்துகளோ வீசலாம். ஒரு பவுலர் தொடர்ந்து 10 பந்துகள் வீசுவது "ஆய்ர்டன்" என்று அழைக்கப்படும்.
ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒருமுறை பேட்டிங் எண்ட் மாற்றப்படும். பவர்பிளே-க்கு மொத்தம் 25 பந்துகள் வீசப்பட வேண்டும். இங்கு நோ பால்களுக்கு ஃப்ரீ ஹிட் மட்டுமல்லாது ஒரு ரன்னுக்குப் பதிலாக 2 ரன்கள் வழங்கப்படுகிறது.
ஷாஹீன் அப்ரிடி மிரட்டல் யார்க்கர்
இந்நிலையில், இந்த தொடருக்கான வெல்ஷ் ஃபயர் அணியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி களமாடி வருகிறார். அவர் நேற்று மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டி எடுத்தார். யார்க்கர்களுக்கு பெயர் போன அவர் அடுத்தடுத்து 2 மிரட்டலான யார்க்கர்களை இறக்கி விட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஓவரில் 4 விக்கெட்
முன்னதாக, இங்கிலாந்து மண்ணில் நடந்த விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் நாட்டிங்ஹாம்ஷயர் அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரில் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil