வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
Shardul Thakur - Rohit Sharma Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒருநாள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
Advertisment
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தாக்கூர் திட்டி தீர்த்த ரோகித்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர் பீல்டிங் கோட்டை விட்டார். அவரை கேப்டன் ரோகித் திட்டி தீர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
ஆட்டத்தின் 19வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான குல்டீப் யாதவ் வீசிய நிலையில், அவரது கடைசி பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் மிட்-ஆஃபில் ஃபீல்டிங் செய்த ஷர்துல் தாக்கூர் நோக்கி பந்தை விரட்டினார். அதை தாக்கூர் கோட்டை விட்ட நிலையில், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வசைபாடினார் கேப்டன் ரோகித். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் இணையவாசிகளின் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil