இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இதனால், தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தால் கூட தொடரை வென்று விடும். ஆனால், இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 2-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன் களம் இறங்கினார். 43-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் அருகில் சென்று இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். இதை பார்த்த லபுஸ்சேன் புன்னகைத்து விட்டு அடுத்த பந்தை சந்திக்க தயாரானார்.
ஆனால், அடுத்த பந்தில் லபுஸ்சேன் ஸ்லிப் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டகாசம் படத்தில், 'ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்' என்ற அஜித் கருணாஸ் காமெடி மிகவும் பிரபலம். அதேபோல் ஒரு காமெடியை தான் பிராட் செய்தார்.
மார்னஸ் பேட்டிங் தயாராகும் போது அங்கிருந்து வந்த பிராட் ஸ்டெம்பில் இருந்த பெய்ல்ஸை இடது புறத்திலிருந்து வலது புறமும் வலது புறத்திலிருந்து இடது புறமும் என மாற்றி வைத்தார். இந்த செயலை பார்த்து மார்னஸ் நக்கலாக சிரித்தார். ஆனால் அடுத்த பந்திலே அவர் கேட்ச் ஆகி வெளியேறினார்.
Joe Root that is 𝗼𝘂𝘁𝘀𝘁𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 🤯
Come for the catch, stay for Stuart Broad's reaction 😱#EnglandCricket | #Ashes pic.twitter.com/W3QmdP1CAY— England Cricket (@englandcricket) July 28, 2023
ஆனால், இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மார்னஸ் நடுவரிடம் சென்று ஸ்டுவர்ட் பிராட் தன்னுடைய கவனத்தை சிதறடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பைல்ஸை இதுபோல் மாற்றி வைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால் பிராடு செய்ததில் எந்த தவறும் இல்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
"I've heard it's an Aussie change-of-luck thing..." 💬
Stuart Broad on the switching of Marnus Labuschagne's bails 😅#Ashes pic.twitter.com/pYyudkRGsP— The Cricketer (@TheCricketerMag) July 28, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.